விஜயை ஓவர் டேக் செய்து மாஸ் காட்டிய லாரன்ஸ்! கமுக்கமா இருந்து தூள் கிளப்பிட்டாரே

Vijay Lawrence: தமிழ் சினிமாவில் லாரன்ஸ் இப்போது முக்கிய கவனம் பெற்ற நடிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து பல உதவிகளை செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் இவருக்கு என ஒரு தனி வரவேற்பு இருந்து வருகிறது .அரசியல்வாதிகளில் இருந்து அனைத்து தரப்பினருக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் லாரன்ஸ்.

அதிலும் மாற்றம் என்ற பெயரில் புதிய சேவையைஆரம்பித்து அதன் மூலம் ஏகப்பட்ட ஏழை எளியவர்களுக்கு உதவிகளை செய்து வரும் லாரன்ஸ் சின்னத்திரை புகழ் கே பி ஒய் பாலாவும் இந்த மாற்றம் சேவையில் இணைந்துள்ளார். ஏற்கனவே ஆரம்பத்தில் இருந்து ஊனமுற்றவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் லாரன்ஸ் இப்போது புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: பாண்டியராஜன்கிட்ட அசிஸ்டண்டா சேர வந்த ரமேஷ் கண்ணா… எத்தனை சலாம் போட்டும் பிரயோஜனமே இல்லையே…?!

இந்த நிலையில் அவர் செய்த ஒரு செயல் அந்த அளவு பத்திரிகைகளில் பெரிதாக பேசப்படவில்லை. ஏனெனில் அதை மிகவும் சைலன்டாக செய்து முடித்திருக்கிறார் லாரன்ஸ். அதாவது ஒரு 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து கிட்டத்தட்ட இரண்டரை கோடி செலவில் பல உதவிகளை செய்திருக்கிறாராம் லாரன்ஸ். அதுவும் தன்னுடைய சொந்த செலவில் இவ்வளவு தொகையில் லாரன்ஸ் செய்த இந்த உதவி பற்றி எந்த ஒரு பத்திரிகைகளிலும் பெரிதாக பேசப்படவில்லை.

அதை அவர் விரும்பவும் இல்லை .இப்படி இவர் செய்த இந்த ஒரு செயல் பலபேரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் கடந்த வருடத்திலிருந்து விஜய் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்து இருக்கிறார். அது இந்த வருடமும் தொடர்வதாக இருந்தது.

இதையும் படிங்க: சிவகார்த்தியேனுக்கு கோடிகளை கொட்டி கொடுத்த 3 படங்கள்!.. 100 கோடி வசூலை தொட்ட டான்!…

இந்த மாதம் 28 மற்றும் அடுத்த மாதம் 3 ஆகிய தேதிகளில் இரண்டு பேச்சுகளாக பிரிக்கப்பட்டு இந்த விழாவை நடத்த இருக்கிறார்களாம் .அதுவும் மாவட்டம் வாரியாக மாணவர்களுக்கு உதவி தொகையை வழங்குகிறாராம் விஜய். கடந்த வருடம் கிட்டத்தட்ட 10 லிருந்து 12 மணி நேரம் முழுமூச்சாக நின்று கொண்டே அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் உதவிகளை வழங்கினார்.

அது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் இந்த வருடம் இரண்டு பேச்சுகளாக பிரித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க இருக்கிறாராம் விஜய். மேலும் விஜய் இப்போது அரசியலில் களம் இறங்குவதால் இவருடைய இந்த செயல் பப்ளிசிட்டி ஆக பேசப்படுகிறது. ஆனால் லாரன்ஸ் செய்த அந்த உதவி பத்திரிகைகளில் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: கல்யாணத்துக்கு முன்னாடி பிரேம்ஜி சொன்ன காமெடி செமயா இருக்கே…! பயில்வான் சொல்றாரு பாருங்க…

 

Related Articles

Next Story