Cinema News
லோகேஷுக்கு ஒன்னுமே தெரியாது!.. இத பண்ணிதான் ஹிட் கொடுக்குறாரு!.. கடுப்பில் பேசிய நடிகர்!..
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் அதிக அளவில் படங்களை இயக்காவிட்டாலும் குறிப்பிட்ட அளவு படங்களின் மூலம் தனக்கென தனி அடையாளத்தினை சினிமா துறையில் உருவாக்கி கொண்டார்.
தமிழில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சிறிய அளவிலான பட்ஜெட் படம் என்றாலும் இப்படத்தில் இவர் பிசுரு தட்டாமல் தனது இயக்கத்தினை மிக சிறப்பாக காட்டியிருப்பார். இவரின் படங்களில் ஒரு தனிதன்மை இருக்கும்.அதன்பின் கார்த்தி நடிப்பில் கைதி திரைபப்டத்தைம் இயக்கி தனது இயக்கத்தில் மற்றுமொரு வெற்றியை கண்டார். மகளை பிரிந்த அப்பாவின் மனநிலைமையை மிக அழகாக காட்டியிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இதையும் படிங்க:விஜய் இல்ல எனக்கு அஜித் தான்… ஆதிக் பலே கில்லாடிப்பா! அடிச்சா சிக்ஸர் தான் இனி!
பின் இவரது இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் விக்ரம். இத்திரைப்படத்தில் கமல், ஜெயராம், ஃபகத் ஃபசில் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் இமாலய வெற்றியை கண்டது என்றுதான் கூற வேண்டும். மேலும் இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இவர் தற்போதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளிவரவுள்ளது. அதன்பின் ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தலைவர் 171-ஐ இயக்கவுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான் மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் மகேந்திரன் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு வெற்றி படமாகவே அமைந்தது. மேலும் இப்படத்தில் நடித்த மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆரம்பத்தில் லோகேஷ் சாருக்கு படத்தினை இயக்க கூட தெரியாது ஏனென்றால் அவர் யாரிடமும் உதவி இயக்குனராக கூட இருந்தது கிடையாது. ஆனால் தனது சொந்த முயற்சியினால் இன்று இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார் என்பதை பார்க்கும் போது தனக்கே பிரம்மிப்பாக இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:‘லியோ’ ரிலீஸுக்கு வந்த சிக்கல்! சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் தவிக்கும் படக்குழு
மேலும் தான் லோகேஷுடன் சமீபத்தில் அதி அளவில் உரையாடியதாகவும் அப்போது அவர் தனது உடலை திடமாக்க ஜிம்க்கு செல்வதாக கூறியதாகவும் தெரிவித்திருந்தார். முன்பு இயக்குனராய் இருந்த பொழுது சாப்பிட கூட மாட்டார் எனவும் ஆனால் தற்போது சரியான வேளைகளில் அவரின் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு திடமாக உள்ளார் எனவும் கூறியுள்ளார்.
பின் இவ்வாறு தனது கடின உழைப்பினால்தான் இவ்வளவு தூரம் உயர்ந்து இருக்கிறார் எனவும் அவரது மாணவனாக மிகவும் பெருமிதத்துடன் அதே சமயம் அவர் மீது தனக்கு பொறாமையாக உள்ளதாகவும் மகேந்திரன் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். எதுக்குப்பா அவர் மேல உனக்கு இவ்ளோ கடுப்பு.
இதையும் படிங்க:அப்பானு கூட யோசிக்காம விஷால் செஞ்ச வேலைய பாருங்க!… அப்பாகிட்ட பேசுற பேச்சா இது?…