Cinema History
டி.எம்.எஸ் பாடததால் எம்.ஜி.ஆர் வேறு மாதிரி நடித்த பாடல்.. அது சூப்பர் ஹிட் பாட்டாச்சே!..
Mgr songs: 50,60களில் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் ஆதர்சன பாடகராக இருந்தவர் டி.எம்.சவுந்தரராஜன். நடிப்பதற்காக சினிமாவில் நுழைந்து சரியான வாய்ப்புகள் இல்லாமல் பாடகராக மாறியவர் இவர். எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் என குரலை மாற்றி பாடுவதில் கெட்டிக்காரர்.
அதனால் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் இவரின் குரல் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். பல நூறு பாடல்களை அவர்களுக்காக இவர் பாடியிருக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி இருக்கும் மற்ற சில பாடகர்கள் சில பாடல்களை பாடியிருந்தாலும் டி.எம்.எஸ் குரல் போல் அவர்களுக்கு வேறு யாரும் செட் ஆகவில்லை.
இதையும் படிங்க: கோபத்தில் ‘முடியாது’ என மறுத்த வாலி!. சமாதானம் செய்த கலைஞர்!.. எம்.ஜி.ஆர் சொன்ன அதே டயலாக்!.
ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும், டிம்.எம் சவுந்தரராஜனுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. அதன்பின் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் யோசுதாஸ் ஆகியோரை தனக்காக எம்.ஜி.ஆர் பாட வைத்தார். அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை எஸ்.பி.பி பாட வேண்டுமென்று சில மாதங்கள் அவருக்காக எம்.ஜி.ஆர் காத்திருந்த சம்பவமும் நடந்தது. அதேபோல், 70களில் யோசுதாஸும் எம்.ஜி.ஆருக்கு பல பாடல்களை பாடியிருக்கிறார்.
நடிகருக்கு பொருந்துவது மாதிரி பாடகர் பாடுவது ஒரு ரகம் எனில், பாடகரின் குரலுக்கு ஏற்றார் போல நடிகர்கள் நடிப்பதும் அவ்வப்போது நடப்பதுண்டு. பொதுவாக எம்.ஜி.ஆர் பாடல்களில் மிகவும் துள்ளலாக இருப்பார். ஓடி, ஆடி நடிப்பார். அதற்கு ஏற்றார் போல டி.எம்.சவுந்தரராஜனும் பாடியிருப்பார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் என்னை ஜெயித்துவிட்டார்!. சிறையில் இருக்கும்போதே சொன்ன எம்.ஆர்.ராதா!..
ஆனால், ஒருமுறை பாடகரின் குரலுக்கு ஏற்றார் போல எம்.ஜி.ஆர் நடித்த சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். டி.ஆர்.ராமன்னா இயக்கத்தில் எம்.ஜி.ஆர், சரோஜதேவி உள்ளிட்ட பலரும் நடித்து 1962ம் வருடம் வெளியான திரைப்படம் பாசம். இந்த படத்தில் ‘பால் வண்ணம் பருவம் கண்டேன்’ என்கிற பாடல் வரும்.
கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை எஸ்.பி.ஸ்ரீனிவாஸ் பாடியிருப்பார். அவரின் குரல் மிகவும் மென்மையாக இருக்கும். எனவே, துள்ளலாக நடிப்பது செட் ஆகாது என்பது எம்.ஜி.ஆர் வழக்கமான தனது பாணியில் இருந்து விலகி, மிகவும் அடக்கி வாசித்த்து சின்ன சின்ன முகபாவனைகளை காட்டி நடித்திருப்பார். இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரொமான்ஸ் சீன் எடுக்கும்போது சாரி கேட்டா எப்படி?!.. சரோஜாதேவியிடம் Fun பண்ணிய எம்.ஜி.ஆர்…