மகளின் திருமணத்திற்காக எல்லோரிடமும் கையேந்திய இயக்குனர்!.. எம்.ஜி.ஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..

Published on: February 20, 2024
mgr
---Advertisement---

எம்.ஜி.ஆரை எல்லோரும் ஏன் வள்ளல் என அழைத்தார்கள் எனில் அதற்கு காரணம் எதையுமே எதிர்பார்க்காமல் அவர் மற்றவர்களுக்கு செய்த உதவிகள்தான். மற்ற நடிகர்களை போல கிள்ளி கொடுக்கும் பழக்கம் அவருக்கு எப்போதும் இருந்தது இல்லை. அள்ளி அள்ளி கொடுத்தே சிவந்த கரம் அவருடையது.

அதனால்தான் எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டுப்போனால் உடனே கிடைக்கும் என திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களில் பலரும் அவரின் ராமாவரம் தோட்டத்துக்கு போனார்கள். தினமும் அங்கு பலரும் நிற்பார்கள். அதில், சிலர் எம்.ஜி.ஆருக்கு தெரிந்தவர்களாகவும், பலரும் தெரியாதவர்களாகவும் இருப்பார்கள்.

இதையும் படிங்க: சிவாஜியுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்!.. எம்.ஜி.ஆர் சொன்ன காரணத்தை பாருங்க!…

யாரிடம் கூப்பிட்டு பேச வேண்டும் என அவருக்கு தோன்றுகிறதோ அவர்களை அழைப்பார். என்ன பிரச்சனை எனக்கேட்டு தேவையான உதவிகளை செய்வார். பெரும்பாலும் மகளுக்கு திருமணம்.. மகனுக்கு திருமணம்.. கையில் பணம் இல்லை.. வாழ வழியில்லை. தொழில் செய்ய பணமில்லை.. என பலரும் சொல்வார்கள். முடிந்த உதவிகளை எம்.ஜி.ஆர் செய்வார்.

அதேபோல், பல இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என திரையுலகை சேர்ந்த பலருக்கும் பல்வேறு வழிகளில் உதவி செய்திருக்கிறார். ஒருமுறை தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான நல்ல நேரம் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது எம்.ஜி.ஆரை பார்க்க சின்னப்ப தேவர் வந்தார். அப்போது ‘டிக் டிக் டிக் இது மனசுக்கு தாளம்’ என்கிற பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது வேறு ஒருவரும் எம்.ஜி.ஆரை பார்க்க வந்துகொண்டிருந்தார். அவரை பார்த்த சின்னப்ப தேவர் எம்.ஜி.ஆரிடம் ‘இவர் தனது மகள் திருமணத்திற்காக எல்லோரிடமும் பணம் கேட்டுக்கொண்டிருக்கிறார். திரையுலகில் பெரிதாக யாரும் அவருக்கு உதவவில்லை. 500, 1000 இப்படி கொடுக்கிறார்கள். அனேகமாக உங்களிடம் உதவி கேட்கத்தான் வருகிறார்’ என சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவா?.. சரோஜாதேவியா?!.. ஏ.எம்.வீரப்பன் செய்த வேலையில் கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்…

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த நபர் எம்.ஜி.ஆரின் அருகில் வந்துவிட்டார். அவரை பார்த்ததும் அதிர்ச்சியான எம்.ஜி.ஆர் உடனே எழுந்து ‘அண்ணே சுந்தரன்னே வாங்கண்னே’ என அழைத்து அவரை கட்டிப்பிடித்து கொண்டார். சுந்தரமோ எதுவுமே பேசமுடியாதவராய் கண்ணீர் விட்டு நின்றார்.

அதைப்பார்த்த எம்.ஜி.ஆர் ‘உங்க பொண்ணு திருமணம்தானே. அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க நேராக என்னிடமே வந்திருக்கலாமே. ஏன் மற்றவர்களிடம் போய் கேட்குறீர்கள்’ என சொல்லி இருக்கிறார். அப்படி எம்.ஜி.ஆரிடம் உதவி பெற்ற அந்த சுந்தரம் எம்.ஜி.ஆரை வைத்து சில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.