எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்து ஒருகட்டத்தில் அவருக்கு மிகவும் நெருக்கமானவராக மாறியவர்தான் ஆர்.எம்.வீரப்பன். இவர் நல்ல கதாசிரியரும் கூட. ஒருகட்டத்தில் இவரின் கதைகளில் நடிக்க துவங்கிய எம்.ஜி.ஆர் வீரப்பனை தயாரிப்பாளராகவும் மாற்றினார். அப்படி ஒருமுறை எம்.ஜி.ஆருக்காக வீரப்பன் உருவாக்கியதை கதை காவல்காரன்.
இந்த கதை எம்.ஜி.ஆருக்கு பிடித்துபோக நடிக்க சம்மதித்தார். இந்த கதையில் ஜெயலலிதா நடித்தால் சரியாக இருக்கும் என வீரப்பன் நினைத்தார். ஆனால், எம்.ஜி.ஆரோ சரோஜாதேவியை சொன்னார். இதில் வீரப்பனுக்கு விருப்பமில்லை. இப்படி பலமுறை கதாநாயகி தொடர்பாக எம்.ஜி.ஆருடன் மாறுபட்ட கருத்துக்கள் வருவதுண்டு என வீரப்பனே ஒரு நூலில் எழுதியிருக்கிறார்.
இதையும் படிங்க: சிவாஜி பட இயக்குனரின் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்!. அதுவும் நடக்காம போச்சே!..
வீரப்பன் சொன்னதை எம்.ஜி.ஆர் ஏற்கவில்லை. சரி படத்தின் படப்பிடிப்பு துவங்கட்டும். அதன்பின் எம்.ஜி.ஆரை சம்மதிக்க வைத்துவிடுவோம் என முடிவெடுத்தார் என நினைத்தார் வீரப்பன். பொதுவாக எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களின் முதல்நாள் படப்பிடிப்பு அவரும் கதாநாயகியும் சேர்ந்தும் நடிக்கும் காட்சியாகத்தான் இருக்கும். ஆனால், வீரப்பனுக்காக அதை விட்டு கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
படத்திற்கு பூஜை போடப்பட்டது. அந்த பூஜையில் சரோஜாதேவி கலந்து கொண்டார். இது எம்.ஜி.ஆரின் வேலை என வீரப்பனுக்கு புரிந்துவிட்டது. அதன்பின் ஒருவழியாக ஜெயலலிதாவே நடிக்கட்டும் என எம்.ஜி.ஆரிடம் பேசி சம்மதிக்க வைத்தார். படப்பிடிப்பு துவங்கியது.1966 தீபாவளிக்கு அப்படத்தை வெளியிட வேண்டும் என வீரப்பன் நினைத்தார். ஆனால், அது நடக்கவில்லை. சரி 1967 ஜனவரியில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்ட வீரப்பன் நினைத்தர். ஆனால், வீரப்பனுக்கு கொடுத்த கால்ஷீட்டை வேறு படத்திற்கு கொடுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.
இதையும் படிங்க: இது வேண்டாம் செய்யாதீங்க!. பொங்கியெழுந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி!. விஜயும் – அஜித்தும் இத கத்துக்கணும்!
இதில் கோபமடைந்த வீரப்பன் எம்.ஜி.ஆருக்கு ஒரு கடிதம் எழுதி அவருக்கு தெரிந்தவர் மூலம் கொடுத்து அனுப்பினார். அதைப்படித்து பார்த்த எம்.ஜி.ஆர் மிகவும் கோபமடைந்தார். ஏனெனில் ‘காவல்காரன் படத்திற்கு கால்ஷீட் கொடுப்பீர்களா? மாட்டீர்களா?.. படத்தின் படப்பிடிப்பு எப்போது நடக்கும்?.. எப்போது ரிலீஸ்?’ என பல கேள்விகளை வீரப்பன் அதில் எழுப்பியிருந்தார். அதன்பின் தேர்தலும் வந்துவிட்டதால் எம்.ஜி.ஆர் அதில் பிஸி ஆகிவிட்டார்.
வீரப்பன் தனது கோபத்தை மறந்துவிட்டு எம்.ஜி.ஆரின் அரசியல் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இது எம்.ஜி.ஆரின் மனதை மாற்றியது. ஒரு மேடையில் பேசும்போது ‘வீரப்பன் என்னை மன்னிக்க வேண்டும். அவரின் காவல்காரன் படத்தில் நான் நடித்து முடிக்கவில்லை’ என ஓப்பனாகவே பேசினார். அதன்பின் அப்படத்திற்கு கால்ஷீட் கொடுத்து நடித்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இவனையெல்லாம் ஏன் உள்ள விட்டீங்க!. சிவாஜியை அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர் பட இயக்குனர்…