Thalapathy68: விஜயின் நடிப்பில் ஒருபக்கம் லியோ படத்தை பற்றி தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சமயத்தில் வெங்கட் பிரபுவின் தளபதி68 படத்தை பற்றிய அப்டேட்களும் வந்து கொண்டிருக்கின்றன.
விஜய் இரட்டை வேடங்களில் கலக்கப் போகும் தளபதி 68ல் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா.
இதையும் படிங்க: அந்த காலத்திலேயே சர்ச்சையை கிளப்பிய கமல் பட பாடல்… ஆண்டவரை காப்பாத்தினதே அவர்தானாம்!…
இந்தப் படம் கண்டிப்பாக காமெடி கலந்த செண்டிமெண்ட் படமாக அமையும் என தெரிகிறது. அதற்கேற்றாற்போல படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கின்றனர். பிரசாந்த், பிரபுதேவா, மாதவன் என 90களில் கலக்கி வந்த முன்னணி நடிகர்களை ஒட்டுமொத்தமாக தளபதி68 படத்திற்காக குத்தகை எடுத்துவிட்டார் வெங்கட் பிரபு.
மெயின் வில்லனாக அரவிந்த்சாமி நடிப்பதாக இருந்தது. ஆனால் அரவிந்த்சாமி இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். அவருக்கு பதிலாக 80களில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகரை வில்லனாக்கியிருக்கின்றனர்.
இதையும் படிங்க: உங்க சவகாசமே வேணாம்டா சாமி! இல்லாததுக்கே இவ்ளோ வேலை பாத்துட்டாங்க – ‘லியோ’வால் கடுப்பான ரெட்ஜெயண்ட்
நடிச்சா ஹீரோ என்ற எண்ணத்தில் இதுவரை இருந்த அந்த நடிகரை வெங்கட் பிரபு எப்படியோ பேசி சம்மதிக்க வைத்து வில்லனாக்கியிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. மைக் மோகன்தான்.
எந்த நடிகரின் படத்திலும் நடிக்க மாட்டேன் என்று சொன்னவரை எப்படி நடிக்க சம்மதிக்க வைத்தார் என்று தெரியவில்லை. இந்தப் படத்திற்காக மைக் மோகனுக்கு பேசப்பட்ட சம்பளம் 2 கோடி ரூபாயாம்.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டாரின் இந்த பாட்டில் இருந்து தான் ’நா ரெடி’ பாட்டை சுட்டார்… அனிருத்தின் தில்லாங்கடியை மாட்டி விட்ட லோகேஷ்..!
இதுவரை அவர் படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் இந்தப் படத்திற்குத்தான் அதிக சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. இதற்கு முன் லியோ படத்தில் அர்ஜுனை வில்லனாக்கி ஒரு ஹைப்பை ஏற்படுத்தினார்கள்.
அதே போல் இந்தப் படத்திற்கும் மோகனை வில்லனாக்கி அதைவிட பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.
