Connect with us

Cinema News

சூப்பர்ஸ்டாரின் இந்த பாட்டில் இருந்து தான் ’நா ரெடி’ பாட்டை சுட்டார்… அனிருத்தின் தில்லாங்கடியை மாட்டி விட்ட லோகேஷ்..!

Lokesh Kanagaraj: அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தில் முதல் சிங்கிளாக ரிலீஸான நா ரெடி பாடல் காப்பி என அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜே சமீபத்தில் கூறி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியாகி இருக்கிறது.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லியோ. இப்படத்தினை லலித்குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தினை இயக்கி இருக்கிறார். படத்தில் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

இதையும் படிங்க: வாலியின் பாடல் பிடிக்காமல் கண்ணதாசனிடம் போன எம்.ஜி.ஆர்!… அட அந்த பாட்டா?!..

த்ரிஷா நாயகியாக நடிக்க அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் என மேலும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தின் முன் வியாபாரமே கிட்டத்தட்ட 500 கோடியை நெருங்கிவிட்டது. இதனால் இப்படம் 1000 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியது விஜயை தான் என பலர் சாடினர். அதனால் ஆடியோ ரிலீஸில் விஜய் எதுவும் கூறுவார் என வெயிட் செய்த ரசிகர்களுக்கு நிகழ்ச்சி ரத்தானது பெரிய ஏமாற்றத்தினை கொடுத்தது.

இதையும் படிங்க: வித்தியாசமா கெட்டப் போடுறேனு வழுக்கிடாதீங்க விஜய்… தலையில் அடித்து சொன்ன டாப் ஹிட் இயக்குனர்..!

இந்நிலையில் லோகேஷ், நான் அமிதாப் பச்சன் நடித்த ஹம் படத்தில் வெளிவந்த ஜும்மா சும்மா பாடலினை போல வேண்டும் எனக் கேட்டு இருந்தேன். அதனை வைத்தே நா ரெடியை அனிருத் உருவாக்கினார் எனக் கூறி இருந்தார். இப்படம் 1991ம் ஆண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top