ரீ எண்ட்ரியில் ஸ்கோர் செய்யும் மோகன்!.. கோட்டைவிட்ட ராமராஜன்!.. சாதிக்குமா சாமானியன்?…

0
672
mohan ramarajan

தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டு பின்னால் காணாமல் போன நடிகர்களில் மைக் மோகனும், ராமராஜனும் முக்கியமானவர்கள். இருவரும் பல வெள்ளி விழா படங்களை கொடுத்தவர்கள். இருவரின் கால்ஷீட்டும் கிடைக்குமா என தயாரிப்பாளர்களை காக்க வைத்தவர்கள். அதேபோல், இருவருமே ரஜினி, கமல் ஆகியோருக்கு டஃப் கொடுத்தவர்கள்.

இருவருமே தொடர்ந்து அதிக படங்களில் நடித்தவர்கள். ராமராஜன் சினிமாவுக்கு வருவதற்கு 10 வருடங்களுக்கு முன்பே சினிமாவுக்கு வந்த மோகன் ராமராஜன் ஃபீல்டை விட்டு போவதற்கு 10 வருடங்களுக்கு முன்பே ஃபீல்டை விட்டு போய்விட்டார். அதாவது மோகன் ஆக்டிவாக இருந்தது 1977ல் இருந்து 1991 வரை. ராமராஜன் 1986 முதல் 2001 வரை ஆக்டிவாக இருந்தார்.

இதையும் படிங்க: ராமராஜன் கொடுத்த லவ் லெட்டர்! பொக்கிஷமாக வைத்திருக்கும் நளினி.. என்ன எழுதியிருக்கார் தெரியுமா

மோகன் எப்படி தயாரிப்பாளர்களின் நடிகராக இருந்தாரோ ராமராஜனும் அப்படித்தான். இப்படி பல ஒற்றுமைகள் இருவருக்கும் உண்டு. ஆனால், சில விஷயங்களில் இருவரும் மாறுபடுகிறார்கள். மோகன் நடித்தது பெரும்பாலும் காதல் கதைகள். அதோடு, நூறாவது நாள், விதி போன்ற பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதேபோல், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்க மாட்டார்.

mike Mohan

 

ஆனால், ராமராஜனோ தொடக்கம் முதல் கடைசி வரை ஒரே பாணியிலான கிராமத்து கதைகளில் ஹீரோவாக மட்டுமே நடித்தார். நடிப்பிலோ, தோற்றத்திலோ அவர் பெரிதாக அலட்டிக்கொண்டது இல்லை. மோகன், ராமராஜன் இருவரின் படங்களின் வெற்றிக்கும் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் முக்கிய காரணமாக இருந்தது.

இதையும் படிங்க: நான் அப்பவே இறந்திருப்பேன்! உருக்கமாக பேசிய ராமராஜன்.. இப்படியெல்லாம் நடந்திருக்கா

இனிமேல் நான் மோகனுக்கு குரல் கொடுக்க மாட்டேன் என பாடகர் சுரேந்தர் விலகிய பின் மோகன் மார்கெட் சரிய துவங்கியது. அவரின் நிஜ குரல் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதேபோல், மனைவி நளினியை விவாகரத்து செய்தபின் ராமராஜனின் சரிவு துவங்கியது. இப்போது சாமானியன் படம் மூலம் ராமராஜனும், ‘ஹரா’ படம் மூலம் மோகனும் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், மோகன் விபரமாக கோட் படத்தில் நடித்து வருகிறார். விஜய் படம் என்பதால் மோகனுக்கும் நல்ல ஸ்கோப் இருக்கும். ரசிகர்களிடம் மீண்டும் ரீச் ஆக இந்த படம் அவருக்கு உதவும். அதன்பின் ஹரா படத்தை வெளியிட்டால் படம் ஓடிவிடும். ஆனால், நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்கிறார் ராமராஜன். எனவே, அவரின் சாமானியன் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் ரீ எண்ட்ரியில் மோகன் ஸ்கோர் செய்துவிட்டார்.. ராமராஜன் கோட்டை விட்டுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

google news