மரண தருவாயில் கமலிடம் நாகேஷ் சொன்ன வார்த்தைகள்!.. காமெடி நடிகருக்குள் இவ்வளவு சோகமா!..
நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் மத்திய அரசு வேலையை விட்டவர் நடிகர் நாகேஷ். சின்ன சின்ன வேடங்கள் கிடைத்து ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறியவர். தனது உடல்மொழியால் ரசிகர்களை கவர்ந்தவர். வித்தியாசமாக நடனமும் ஆடுவார். சிறந்த நடிகரும் கூட.
காமெடி மட்டுமில்லாமல் குணச்சித்திரமாகவும் பல படங்களில் அசத்தி இருக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார். ஒரே நாளில் பல படங்களிலும் நடிக்கும் அளவுக்கு பிசியான நடிகராக மாறினார். நாகேஷுக்காக எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்களே படப்பிடிப்பு தளங்களில் காத்திருப்பார்கள்.
இதையும் படிங்க: ஒருநாள் இது நடக்கும்!.. ஏ.வி.எம் சரவணனிடம் சவால் விட்ட நாகேஷ்!.. அட அது அப்படியே நடந்துச்சே!….
சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் உள்ளிட்ட பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் நாகேஷின் கொடி கோலிவுட்டில் பறந்தது. கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்த நடிகர் நாகேஷ். எந்த ஊடகத்தில் பேசினாலும் சிவாஜி மற்றும் நாகேஷ் பற்றி பேசாமல் இருக்கமாட்டார். அதோடு, தான் நடித்த பல படங்களில் நாகேஷை அவர் நடிக்க வைத்திருக்கிறார்.
குறிப்பாக அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, நம்மவர் என சில படங்களை சொல்ல முடியும். அபூர்வ சகோதரர்கள் படத்தில் அசத்தலான வில்லனாக வருவார் நாகேஷ். அதேபோல், நம்மவர் படத்தில் மகள் இறந்துவிட்டால் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர் காட்டிய நடிப்பை சிவாஜியால் கூட செய்ய முடியாது.
இதையும் படிங்க: நான் செய்தால் நஷ்டம்.. நீங்கள் மட்டும் செய்யலாமா?!. எம்.ஜி.ஆரை கேள்வியால் மடக்கிய நாகேஷ்!…
கடைசியாக கமல் 10 வேடங்களில் நடித்த தசாவதாரம் படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். அதோடு, சரி. அதன்பின் உடல் நலம் பாதிக்கப்பட்டு பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் 2009ம் வருடம் தனது 75வது வயதில் மரணமடைந்தார். இவரின் மகன் ஆனந்த்பாபு சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நாகேஷ் மரண தருவாயில் இருந்தபோது கமலும், கிரேஸி மோகனும் அவரை பார்க்க சென்றுள்ளனர். அப்போது கமலிடம் நாகேஷ் ‘நம்மளையெல்லாம் மக்கள் மறந்துடுவாங்கடா.. ரொம்ப எதிர்பார்க்காத’ என சொல்லி இருக்கிறார். அதற்கு கமல் கண்ணீர் கசிந்தபடியே ‘நான் உங்களை ஞாபகம் வச்சிக்குவேன் சார்’ என சொன்னாராம்.