neppolian- vijay

தவெக தலைவர் விஜய் தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழகமெங்கும் முக்கிய நகரங்களில் கூட்டங்களை நடத்தி வருகிறார். நேற்று தஞ்சையில் பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதே வேலை விஜய் குறித்து சர்ச்சையான விசயங்களும் அவ்வப்போது வெளிவருகிறது. சமீபத்தில் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து வேண்டி செங்கல்பட்டு நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அதனை விட மறுக்கிரார் என்றும் கூறியிருந்தார். இந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் விஜய் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில், விஜய் அவருடைய தாய், தகப்பனை கிட்ட சேர்த்துகல, மனைவியை கிட்ட சேர்த்துக்கல, குழந்தைகளை கிட்ட சேர்த்துகல, சொந்த குடும்பத்தையே கவனிக்க மாட்டேங்குறாரே இவர் நாளை நம்ம குடும்பத்தை எப்படி கவனிப்பார் என்ற எண்ணம் மக்களுக்கு வருமா இல்லையா என்று அவர் கூறிய காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே போக்கிரி படப்பிடிப்பில் நெப்போலியனுக்கும் விஜய்க்கும் கருத்து மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.