Cinema History
நடிக்க முடிவெடுத்ததும் பிரபு செஞ்ச முதல் காரியம்!.. ஆடிப்போன நடிகர் திலகம்….
Actor prabu: தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். அவரின் மகன் பிரபுவை வெளிநாட்டில் படிக்க வைத்தார். அவரை எப்படியாவது போலீஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என நினைத்தார். ஆனால், பிரபுவுக்கோ நடிகராக வேண்டும் என்கிற ஆசையே இருந்தது. பிரபு சினிமாவுக்கு வருவது சிவாஜிக்கு பிடிக்கவில்லை.
ஆனால், திரையுலகம் விடவில்லை. பிரபுவை நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்தனர். சிவாஜியோ மறுத்துக்கொண்டே வந்தார். அமரகாவியம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், சிவாஜி விடவில்லை. அதேபோல், சங்கிலி என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிவாஜி நோ சொல்லவே, இயக்குனர் சி.வி.ராஜன் சிவாஜியின் தம்பி சண்முகத்திடம் பேசி சம்மதம் வாங்கினார்.
இதையும் படிங்க: என்கிட்ட எல்லாரும் பயப்படுவாங்க!. ஆனா சிவாஜி வேறலெவல்!. அப்போதே சொன்ன பானுமதி..
முதல் படத்திலேயே சிவாஜியுடன் சண்டை போடும் வேடம் பிரபுவுக்கு. ஆனாலும், தைரியமாக நடித்தார். அந்த படம் ஹிட் அடிக்கவே பிரபுவுக்கு வாய்ப்புகள் வந்தது. சிவாஜியும் அவரை விட்டுவிட்டார். 80களில் பல படங்களில் நடித்த பிரபு 90களிலும் பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஒரு மினிமம் கேரண்டி ஹீரோவாகவே பிரபு வலம் வந்தார்.
இவர் நடிப்பில் வெளிவந்த சின்னத்தம்பி அதிக நாட்கள் ஓடிய தமிழ் சினிமா லிஸ்ட்டில் இருக்கிறது. குஷ்புவுடன் இணைந்து பிரபு நடித்த பல படங்கள் ரசிகர்களுக்கு விருந்துதான். ஹீரோவாக 100 படங்களுக்கும் மேல் நடித்த பிரபு இப்போது குணச்சித்திர நடிகராக கலக்கி வருகிறார்.
இதையும் படிங்க: சிவாஜி அப்பவே பதில் சொல்லிட்டார்!.. கலைஞர் 100 விழாவில் ஏழரையை இழுத்து வசமாக சிக்கிய ரஜினி..
சங்கிலி படத்தில் நடிக்க வாய்ப்பு தான் நடிப்பது உறுதியானதும் முதல் நாள் படப்பிடிப்புக்கு பிரபுவும், சிவாஜியும் கிளம்பிக்கொண்டிருந்தனர். அப்போது சிவாஜியிடம் ‘அப்பா நீங்க முன்னாலே போங்க. நான் பின்னாலே வருகிறேன்’ என சொல்லி இருக்கிறார். சிவாஜி ‘உனக்கும் எனக்கும் காம்பினேஷன் காட்சி இருக்குடா.. எங்க போற?’ என கேட்க, பிரபுவோ ‘வந்து விடுகிறேன் நீங்கள் போங்க’ என சொல்லிவிட சிவாஜி சென்றுவிட்டார்.
அதன்பின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிரபுவிடம் ‘எங்கடா போயிருந்த?’ என சிவாஜி கேட்க, பிரபுவோ ‘முதன் முறையா நடிக்க போறேன். அதான் பெரியப்பாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்தேன்’ என்றாராம். பெரியப்பா என அவர் சொன்னது எம்.ஜி.ஆரை. சிவாஜி எம்.ஜி.ஆரை எப்போதும் அண்ணன் என்றுதான் அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இவன் சினிமாவில் நடிக்க கூடாது!. கறாரா சொன்ன சிவாஜி!.. பிரபு ஹீரோவான கதை இதுதான்!..