காத்திருந்தவங்க கேனைகளா? பாண்டியராஜனிடம் வருத்தம் தெரிவித்த ரஜினி.. இது எப்போ நடந்தது?

Published on: April 25, 2024
rajini
---Advertisement---

Rajini Pandiayarajan: திரை உலகில் மிகவும் உச்சம் தொட்ட நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ஹிந்தி,தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் போன்ற மொழி சினிமாக்களில் சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் நம் சூப்பர் ஸ்டாருக்கு இருக்கிற மரியாதை மற்ற எந்த மொழி சூப்பர் ஸ்டார்களுக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எப்பேர்ப்பட்ட புகழை கொண்டவராக இருந்தாலும் பழகுவதில் மிகவும் எளிமையானவரும் எந்த ஒரு ஈகோவும் இல்லாதவராகவும் தான் இதுவரை இருந்து வருகிறார். பெரியவர் சிறியவர் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் சமமாக பழகக் கூடியவர்.

இதையும் படிங்க: அட்லீஸ்ட் ஒரு சூர்யா!.. கழுத குடிசையா இருந்தாலும் பரவால்ல.. சுதா கொங்கராவுக்கு இந்த நிலைமையா?..

எந்த ஒரு மேடைகளில் பேசினாலும் தன்னுடைய அனுபவத்தால் மற்றவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என நல்ல அறிவுரைகளையே இதுவரை வழங்கி வருகிறார். அதேபோல் எந்த ஒரு திரைப்படம் வெளிவந்தாலும் அதை பார்த்து உடனே முதல் ஆளாக விமர்சனம் செய்யக்கூடிய ஒரு நபராக ரஜினி இருந்து வருகிறார்.

அதிலும் அந்த படம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டால் இந்த படத்தில் நடித்த கலைஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரையும் அழைத்து பாராட்டுவது அவருடைய வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் பாண்டியராஜனிடம் ரஜினி வருத்தம் தெரிவித்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: உனக்கு எப்பவுமே 18 தான் ஸ்ரேயா!.. 41 வயசுன்னு சொன்னா யாரு நம்புவா!.. கவர்ச்சி சும்மா தூக்குது!..

விமான நிலையத்தில் காலை 4 மணியிலிருந்து வரிசையில் காத்துக் கொண்டிருந்தாராம் நடிகர் பாண்டியராஜன். அவருக்கு பின் வரிசையில் நின்று கொண்டிருந்தாராம் ரஜினி. உடனே அங்கிருந்த ஊழியர்கள் ரஜினியை பார்த்ததும் அவரை முதலில் உள்ளே செல்ல அனுமதித்தார்களாம். அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் ரஜினி வேகவேகமாக சென்றுவிட்டாராம். அதன் பிறகு 10 மணியளவில் பாண்டியராஜனுக்கு போன் செய்து நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்தாராம்.