ஷங்கரின் நடிப்பை பார்த்து மிரண்டு போன ரஜினி! அது மட்டும் நடக்கலைனா இன்று ஷங்கரின் நிலைமை

Published on: April 16, 2024
sankar
---Advertisement---

Shankar Rajini: இன்று தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பேர் போனவர் இயக்குனர் ஷங்கர். ஒரு படத்திற்கான செட்டை பிரம்மாண்டமாக பல கோடிகளில் அமைத்து அதன் மூலம் ரசிகர்களை கவர்வதில் முதன்மை இயக்குனராக திகழ்பவர். இன்று ஷங்கரின் மூத்த மகள் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அதற்கான ஏற்பாட்டையும் மிகவும் பிரம்மாண்டமாக போட்டிருக்கிறார்.

ஷங்கர் இல்லத்திருமணவிழா என்பதால் திரையுலகினரை சார்ந்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த நிலையில் ஷங்கரின் ஆரம்பகால வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை சித்ரா லட்சுமணன் கூறினார். அதாவது ஆரம்பத்தில் ஷங்கர் நாடக மேடையில் நடித்துக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: இனிமேல் எல்லாம் முடிஞ்சி போச்சி… சூப்பர்ஸ்டாரை பார்த்து பயந்த எம்.ஜி.ஆர்!..

அவருடைய நாடகத்தை பார்க்க ஒரு சமயம் ரஜினியும் எஸ்.ஏ.சந்திரசேகரும் சென்றிருந்தார்களாம். ஷங்கர் அந்த நாடகத்தில் சிறப்பாக நடித்துக் கொண்டிருந்தாராம். நாடகம் முடிந்ததும் ரஜினியும் எஸ்.ஏ.சந்திரசேகரும் ஷங்கரை சந்தித்து பாராட்டினார்களாம். இதிலிருந்து ஷங்கர் எப்படியாவது எஸ்.ஏ.சி நம்மை நடிக்க அழைப்பார் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்களாம்.

ஆனால் சில நாள்கள் கழித்து எஸ்.ஏ.சியிடம் இருந்தே அழைப்பு வந்திருக்கிறது. நடிக்க இல்லையாம். காமெடி டிராக்கில் பணிபுரிய ஒரு உதவியாளர் வேண்டும். அதனால் அதை நீ கவனித்துக் கொள் என சொல்லி அழைத்திருக்கிறார். சரி வந்த வாய்ப்பை ஏன் தவறவிட வேண்டும் என்று நினைத்து ஷங்கரும் போயிருக்கிறார்.

இதையும் படிங்க: ஐயோ பாத்தாலே வெறியேறுதே!.. ஓவர் டோஸ் கவர்ச்சியில் உசுர வாங்கும் மாளவிகா!..

அதிலிருந்தே தொடர்ந்து எஸ்.ஏ.சியின் படங்களில் உதவி இயக்குனராகவே பணிபுரிந்திருக்கிறார். அப்படி இருந்ததனால்தான் ஜெண்டில்மேன் படத்தை இயக்கும் ஷங்கரை தேடி வந்திருக்கிறது. ஒருவேளை இவரிடம் நாம் ஏன் வேலை செய்ய வேண்டும் என எஸ்.ஏ.சி யை விட்டு போயிருந்தால் இன்று இந்த பிரம்மாண்ட இயக்குனரை நாம் கண்டிர முடியாது என சித்ரா லட்சுமணன் கூறினார்.

 

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.