Cinema History
ஒரு சீனுக்கு இவ்வளவு வசனமா?!.. ஆள விடுங்க!.. படப்பிடிப்பிலிருந்து மாயமான ரஜினி…
நாடகங்களிலிருந்து சினிமா உருவனதாலோ என்னவோ துவக்கத்தில் சினிமாவிலும் பக்கம் பக்கமாக வசனம் பேசினார்கள். 1940 முதல் 1970 வரையிலும் கூட சினிமாவில் அதிக வசனங்கள் இடம் பெற்றிருந்தது. அதனால், இயக்குனரை விட ஒரு படத்தின் வசனகர்த்தாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
அதுவும் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் நடித்த சரித்திர படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. பல பக்கங்களுக்கு வசனம் இருக்கும். வசனங்களை மனப்பாடம் செய்து நடிகர்கள் பேசுவார்கள். அதிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எவ்வளவு பெரிய வசனம் என்றாலும் படிக்க சொல்லி கேட்டு மனப்பாடம் செய்து பேசி நடித்து அசத்திவிடுவார்.
இதையும் படிங்க: வீட்டு வேலைக்காரர்களை கேவலமாக நடத்துகிறாரா ரஜினி? பிரபலம் கொடுத்த ‘நச்’ பதில்!..
கலைஞர் கருணாநிதி போன்ற சில வசனகர்த்தாக்கள் அதிக வசனங்களை எழுதுவார்கள். பராசக்தி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம்தான். 80களுக்கு பின் சினிமாவில் அதிக அளவில் வசனங்கள் பேசுவது குறைந்து போனது. பாரதிராஜா, மணிரத்னம் போன்றவர்கள் வசனங்களை குறைத்து காட்சிப்பூர்வமாக கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்தினார்கள்.
நடிகர் ரஜினி சினிமாவில் நடிக்க துவங்கிய போது அவருக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது அவரின் தமிழ் உச்சரிப்புதான். தட்டுத்தடுமாறி தமிழை கற்றுக்கொண்டிருந்தாலும் அவருக்கு உச்சரிப்பு சரியாக வரவில்லை. பல வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. ஆனாலும், ஒருவழியாக பேசி நடித்து சமாளித்தார்.
இதையும் படிங்க: இவங்களுக்கா பிரச்னை? குழப்பத்தில் இருந்த ரஜினிகாந்த்… எம்.ஜி.ஆர் கொடுத்த அட்வைஸ்!..
ஒருகட்டத்தில் சினிமாவை விட்டே போய்விடலாம் என்று கூட நினைத்தார். ஆனால், சினிமா உலகம் அவரை விடவில்லை. ரஜினியை வைத்து அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அவரின் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம்தான் ‘புவனா ஒரு கேள்விக்குறி’. இந்த படத்தின் படப்பிடிப்பில் ரஜினி இருந்தபோது ஒரு காட்சிக்கு அதிக வசனங்களை பேச சொல்லி இருக்கிறார்கள்.
இதில் ஜெர்க் ஆன ரஜினி படப்பிடிப்பு தளத்தில் இருந்து மாயமாகி விட்டாராம். அதன்பின் அவரை அழைத்து விசாரித்த எஸ்.பி.முத்துராமனிடம் ‘பாரதிராஜா சார் ஒரு முழுப்படத்துக்கே இவ்வளவு வசனம் கொடுக்க மாட்டார். ஒரு சீனுக்கு இவ்வளவு கொடுக்கிறீங்களே’ என தயங்க அவரை சமாதானம் செய்து நடிக்க வைத்து படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஸ்ரீவித்யாவுடன் ரொமான்ஸ் செய்த ரஜினிகாந்த்… டப்பிங்கில் குழம்பிய ஆச்சரியம்!…