தம்பி கண்டிப்பா ஜெயிக்கணும்!.. விஜயின் அரசியலில் ஆர்வம் காட்டும் ரஜினி!.. இது செம டிவிஸ்ட்!..
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும் என பலரும் நினைத்தனர். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அவர் அரசியலில் இறங்கிவிட்டார். தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் எனவும் அவர் அறிவித்திருக்கிறார்.
அரசியல் அறிவிப்பை அறிவிப்பதற்கு முன்பே கடந்த சில வருடங்களாகவே தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் அடிக்கடி சந்தித்து அரசியல் தொடர்பான ஆலோசனைகளை விஜய் செய்து வந்தார். ஆனால், செய்தியாளர்களை சந்தித்து எதுவும் சொல்லவில்லை. இப்போதும் கூட அரசியல் அறிவிப்பு தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டாரே தவிர செய்தியாளர்களை சந்தித்து அவர் எதுவும் பேசவில்லை.
இதையும் படிங்க: இளையராஜா பயோபிக் இப்படித்தான் இருக்கும்!. நோ டவுட்!.. புட்டு புட்டு வைத்த பிரபலம்!..
இப்போது கோட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஏராளமான கூட்டம் கூடுகிறது. எனவே, அவர்களோடு செல்பி எடுப்பது, வீடியோ எடுப்பது என விஜய் மாஸ் காட்டி வருகிறார். அதுவும் சமீபத்தில் கோட் படத்திற்காக அவர் திருவனந்தபுரம் சென்றிருந்தபோது ஏராளமான கேரள ரசிகர்கள் கூடிவிட்டனர்.
விஜய்க்கு முன்பு அரசியலுக்கு வருவதாக சொல்லி வந்தவர்தான் நடிகர் ரஜினி. கடந்த 25 வருடங்களுக்கும் மேல் தான் நடிக்கும் படங்களில் அரசியல் தொடர்பான வசனங்களை பேசியதோடு, நான் அரசியலுக்கு வருவேன் என மறைமுகமாக சொல்லி வந்தார். மேலும், ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் அறிவித்தார்.
ஆனால், சில மாதங்களிலேயே தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜகா வாங்கினார். அவர் அரசியல் அறிவிப்பை அறிவிப்பதற்கு முன்பே அவரின் நண்பர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தார். அதை ரஜினியே எதிர்பார்க்கவில்லை. இப்போது அரசியலுக்கு வரவில்லை என ரஜினி அறிவித்தபின்னர் விஜய் வருவதாக அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ‘கருப்பன்’ என்று சொல்லி விஜயகாந்தை வெறுத்த ராதிகா.. இப்படியெல்லாம் நடந்திருக்கா?!..
இந்நிலையில், செய்தியாளர்களிடம் விஜயின் அரசியல் பிரவேசம் எப்படி இருக்கிறது என விசாரித்து வருகிறாராம். சமீபத்தில் அவரை சந்தித்த ஒரு நிருபரிடம் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து ரஜினி பேசியிருக்கிறார். அதன்பின் அவர் வேறுமாதிரி நினைத்துவிட்டால் தப்பாகிவிடும் என யோசித்த ரஜினி ‘அது ஒன்னுமில்ல.. தம்பி விஜய் கண்டிப்பா அரசியல்ல ஜெயிக்கணும்’ என சொல்லி இருக்கிறார்.
இப்படி சொல்லும் இதே ரஜினி விஜயின் கட்சி தேர்தலில் போட்டியிடும் போது வெளிப்படையாக ஆதரவு கொடுக்கமாட்டார் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.