Connect with us
viji

Cinema News

மேல ஏறாதீங்க! போலீஸ் சொன்னதையும் மீறி தடுப்பை தாண்டி கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ‘கைதி’ பட நடிகர்

Captain Vijaykanth: தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் விஜயகாந்த். 150 படங்களில் நடித்து சினிமாவில் கிட்டத்தட்ட 40ஆண்டு காலம் கொடி கட்டி பறந்தார். ரஜினி, கமலுக்கே ஒரு கட்டத்தில் டஃப் கொடுத்த நடிகராகவும் திகழ்ந்தார்.

எம்ஜிஆருக்கு அடுத்த படியாக மக்கள்  செல்வாக்கு அதிகம் பெற்ற நடிகராகவும் வாழ்ந்து வந்தார் கேப்டன் விஜயகாந்த். இன்று அவர் நம்மிடம் இல்லை எனும் போது கடைகோடி மக்களில் இருந்து பிரபலங்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது.

இதையும் படிங்க: செருப்பை தூக்கி வீசி எறிந்த ரசிகர்கள்! அஞ்சலி செலுத்த வந்த விஜய்க்கு நேர்ந்த விபரீதம் – வைரலாகும் வீடியோ

அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. திரையுலகை சார்ந்த பல்வேறு தரப்பினர் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செல்கின்றனர். சத்யராஜ் விஜயகாந்த் உடலை பார்த்து அழுத காட்சி பார்த்த அனைவருக்கும் நெஞ்சை உலுக்கியது.

ramana

ramana

அவர்கள் இருவரும் சம கால நடிகர்கள். ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டியவர்கள். அதே போல் எம்.எஸ். பாஸ்கர் அப்படியே விஜயகாந்த் உடல் அருகே அமர்ந்து கதறி அழுத படி இருந்தார். இப்படி பல்வேறு தரப்பினர் மத்தியில் விஜயகாந்த் நீங்கா இடம் பிடித்த ஒரு அற்புத மனிதராகவே வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார்.

இதையும் படிங்க: வசமா மாட்டிக்கொண்ட பாக்கியலட்சுமி இயக்குனர்… என்னத்தை சொல்றாருனு தான் பார்ப்போமே!

ஒரு மேடை பேச்சின்  போது கூட ‘விஜயகாந்த் என்ற ஒருத்தன் இருந்தான், வாழ்ந்தான் என்று வாழ்ந்துவிட்டு போக வேண்டும்’என்று சொல்லியிருப்பார். அதே போல்தான் இன்று பல லட்சம் மக்கள் மத்தியில் ஒரு தெய்வமாக திகழ்கிறார் விஜயகாந்த்.

இந்தன் நிலையில் பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்த வந்த வண்ணம் இருக்க நடிகர் ரமணா நேற்று அவரது அலுவலகத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த போது போலிஸார் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை. தடுப்பின் அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: ரியல் போலிஸுக்கே டஃப் கொடுத்த விஜயகாந்த்! காவல்துறை அதிகாரியாக பட்டைய கிளப்பிய படங்கள்

தடுப்பை கொஞ்சம் நகர்த்துங்கள் நான் உள்ளே போய்விடுகிறேன் என்று சொல்லியும் தடுப்பை எடுக்கவில்லை. அதன் பிறகு அங்கு இருந்த ஒரு போலீஸிடம் அனுமதி பெற்று அந்த தடுப்பின் மீது ஏறி உள்ளே வந்தார். அவர் ஏறும்  போது பெண் போலீஸ் ஒருவர் மேலே ஏறாதீங்க என்று கத்த அதற்குள் ரமணா குதித்துவிட்டார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top