எப்படிண்ணே நடிக்கிறீங்கன்னு கேட்ட தனுஷ் கையில நேஷனல் அவார்டு! என்கிட்ட வெறும் ஓடு.. புலம்பிய நடிகர்

Published on: January 10, 2024
dhanush
---Advertisement---

Actor Dhanush: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு தனுஷின் வளர்ச்சி அசுர வளர்ச்சியாக மாறியிருக்கிறது. அதுவும் அவரின் தோற்றத்தில் இருந்து அவரின் நடிப்பு வரைக்குமே நல்ல ஒரு பக்குவம் அடைந்திருப்பதாகவே தெரிகிறது.

அவரின் கேப்டன்  மில்லர் திரைப்படத்தை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தன் அசுரத்தனமான நடிப்பால் அனைவரையும் மிரட்டி வருகிறார் தனுஷ். அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: அவருக்கு முன்னாடி நான்லாம் சின்ன பையன்!.. சிவாஜியையே பிரமிக்க வைத்த நடிகை…

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா தனுஷை பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார். தனுஷின் ஆரம்ப கால படத்தில் பயணித்தவர் ரமேஷ் கண்ணா. முதல் படமான துள்ளுவதோ இளமை படத்திலும் ரமேஷ் கண்ணா நடித்திருக்கிறார்.

அந்தப் படத்தில் செ*ஸ் பற்றிய புத்தகத்தை விற்கும் ஒரு கதாபாத்திரத்தில் ரமேஷ் கண்ணா நடிக்க  முதலில் வடிவேலு மற்றும் விவேக் இவர்களில் ஒருவர்தான் நடிக்க இருந்ததாம். ஆனால் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என அவர்கள் இருவரும் விலக ரமேஷ் கண்ணாவுக்கு வாய்ப்பு போயிருக்கிறது.

இதையும் படிங்க: அடுத்தடுத்து 3 படங்கள்!.. ரஜினிக்கு உதவும் மந்திரங்கள்.. சீக்ரெட்டை வெளியே சொன்ன பிரபலம்…

இருந்தாலும் விருப்பமே இல்லாமல் விற்கும் ஒரு கதாபாத்திரமாக படத்தில் காட்டுங்கள் என்பது போன்ற கோரிக்கைகளுடன் தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அப்போது இவரின் நடிப்பை பார்த்த தனுஷ் ‘எப்படிண்ணே இப்படியெல்லாம் நடிக்கிறீங்க? சூப்பரா நடிக்கிறீங்க’ என சொன்னாராம்.

இதை குறித்து பேசிய ரமேஷ் கண்ணா எப்படிண்ணே நடிக்கிறீங்கனு கேட்ட தனுஷ் இப்போது நேஷனல் அவார்டுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். ஆனால் நான்? என சொல்லி தனுஷ்தான் மகாநடிகன் என்று கூறி சிலாகித்தார்.

இதையும் படிங்க: மயில்சாமி மகனுக்கு இப்படி ஒரு அவமானமா? விஷயம் தெரிஞ்சு ரஜினி சும்மா இருப்பாரா என்ன?

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.