Cinema News
ஏழு வருஷம் வீட்டுக்கு போகல..யாருக்கும் அந்த கெட்ட பழக்கம் இல்ல.. ராம்கியின் பிளாஷ்பேக்
பிலிம் இன்ஸ்டிட்யூட் மூலமாக நடிப்பை பற்றி நன்கு அறிந்து வைத்த நடிகர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ராம்கி. நாசர், ரகுவரன் மற்றும் ராம்கி மூவருமே ஒரே நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள். தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார் ராம்கி. சமீப காலமாக தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து அங்கு ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் கூட அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. தமிழில் நிலவே முகம் காட்டு, பாளையத்தம்மன், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, படைவீட்டு அம்மன், குற்றப்பத்திரிகை போன்ற படங்களில் நடித்திருக்கிறார் .நடிகை நிரோஷாவை திருமணம் செய்து கொண்ட ராம்கி இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கின்றனர் .
இதையும் படிங்க: அந்த விஷயத்தால் ரொம்ப நொந்துப்போன வெற்றிமாறன்!.. வடசென்னை 2 வருமா? வராதா?!..
இவருடைய படங்களில் இன்று வரை யாராலும் மறக்க முடியாத படங்களாக அமைந்திருப்பவை செந்தூரப்பூவை, இணைந்த கைகள், மருதுபாண்டி ,வெள்ளையத்தேவன், சின்ன பூவே மெல்ல பேசு, நிலவே முகம் காட்டு, கருப்பு ரோஜா, வனஜா கிரிஜா போன்ற படங்களாகும். இந்த படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும்.
இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ராம்கி அவருடைய சில சுவாரசிய வாழ்க்கை சம்பவங்களை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது ராம்கியை பொருத்தவரைக்கும் அவருடைய வீட்டில் உள்ளவர்களுக்கு யாருக்குமே எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. சிகரெட். பிடித்தாலே மிகப்பெரிய தவறாம் .
அது மட்டுமல்ல அவர் வீட்டில் உள்ள அனைவருமே நன்கு படித்தவர்களாம். ஆனால் இவருக்கு படிப்பு சுத்தமாக வரவே இல்லையாம். அதனால் இவர் உருப்படவே மாட்டார் என நினைத்து வீட்டில் உள்ளவர்கள் இவரை தண்ணி தெளித்து விட்டார்களாம். இந்த ஒரு கோபத்தால் வீட்டை விட்டு வெளியேறி சுமார் ஏழு வருடங்கள் அவர் வீட்டிற்கு போகாமலேயே சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டு அலைந்தாராம் ராம்கி.
இதையும் படிங்க: கஞ்சா கும்பலுடன் தொடர்பு?!… மன்சூர் அலிகான் மகனை தூக்கிய போலீசார்!..
ஒரு கட்டத்திற்கு பிறகு இவரு ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் நல்ல ஒரு வரவேற்பைப் பெற அவருடைய அப்பா ‘நான்தான் அவனுடைய அப்பான்னு சொல்ல வச்சிட்டான் என் புள்ள’ என பெருமையாக பேசினாராம் . இதை ஒரு பேட்டியில் மிகவும் சந்தோஷமாக கூறினார் ராம்கி.