விஜய் சேதுபதிக்கு அப்பாவாக நடிக்கும் டாப் ஹீரோ! என்னடா இவருக்கு வந்த சோதனை?

sethu
Vijaysethupathi: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. ஆரம்பத்தில் துணை நடிகராகவே ஒரு சில படங்களில் நடித்து வந்த விஜய்சேதுபதியை ஹீரோவாக்கி அழகுபார்த்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தான் முதன் முதலில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்தார். பெரிய கமெர்ஷியல் படமாக இல்லாவிட்டாலும் எதார்த்தத்தை அழகு பட காட்டக் கூடிய காவியமாக அந்தப் படம் அமைந்தது.
அதனாலையே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் விஜய்சேதுபதி. அதனை தொடர்ந்து பீட்சா, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி உட்பட ஒரு வாழ்வியலை அடிப்படையாக கொண்ட படங்களிலேயே நடித்து ஹீரோவுக்கான அந்தஸ்தை பெற்றார்.
இதையும் படிங்க: கோட் படத்தால் திடீர் முடிவெடுத்த தக் லைஃப் டீம்… இது நல்ல இருக்கே!…
அதன் பிறகு அவரது வாழ்க்கையில் ஒரே ஏறுமுகம் என்றே சொல்லலாம். ஒரு மாபெரும் நடிகராக மாறினார். இதற்கிடையில் வில்லனாக நடித்தும் மாஸ் காட்டினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழி சினிமாவும் இவரை அன்போடு அரவணைத்துக் கொண்டது.
இந்த நிலையில் நீண்ட நாளுக்கு பிறகு இப்பொழுதுதான் ஹீரோவாக வரிசையாக படங்களில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இவரை போன்றே 90களில் ஒரு சூப்பர் ஹீரோவாக ஜொலித்தவர்தான் சரவணன். விஜயகாந்தின் சாயல் இவரின் முகத்தில் இருந்தாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தனர்.
இதையும் படிங்க: முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு!.. இளையராஜா அதை எப்படி செக் பண்ணார் தெரியுமா?!..
சமீபகாலமாக சரவணன் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இன்று விமல் நடித்த சார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறன், சரவணன் போன்ற பல நடிகர்கள் கலந்து கொண்டனர்.

sara
அப்போது பேசிய விஜய்சேதுபதி சரவணனை பார்த்து அழகா இருந்தீங்க என்று கூறினார். அதற்கு சரவணன் விஜய்சேதுபதியின் காலை தொட்டு கையெடுத்துக் கும்பிட்டார். உடனே விஜய்சேதுபதி ‘கொஞ்சம் பெரிய மனுஷன் மாறி நடந்துக்கோங்க’ என கூறினார்.
இதையும் படிங்க: தேவாரா புரோமோஷனில் அசிங்கப்பட்ட அனிருத்! இந்த அவமானம் தேவையா?
உடனே சரவணன் குறுக்கிட்டு இந்த வார்த்தையை சொல்வதற்கு காரணம் ‘அடுத்த படத்தில் விஜய்சேதுபதிக்கு அப்பாவாக நடிக்கிறேன். அதனால்தான் அவர் இப்படி சொல்கிறார்’ என சரவணன் கூறினார்.