Connect with us

Cinema History

படத்துல அண்ணனைப் போட்டு இப்படி அடிக்கிறாங்களேன்னு கோபமா வரும்….! – செந்திலின் தங்கை

நடிகர் செந்திலைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அவரும் கவுண்டமணியும் சேர்ந்து தமிழ்சினிமாவை 80….90களில் கலக்கியிருந்தனர். செந்திலின் யதார்த்தமான நகைச்சுவை அனைவருக்கும் பிடித்துப் போய் விட்டது. அவரது தங்கை அண்ணன் செந்திலைப் பற்றி என்ன சொல்கிறார் என பாருங்க.

செந்திலின் உடன்பிறந்த தங்கை முனீஸ்வரி. சிவகங்கை அருகில் உள்ள காரைக்குடி பகுதியில் ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நான் வந்து செந்திலுக்கு 3வது தங்கச்சி. நாங்க மொத்தம் 7 பேரு. 3 அண்ணன்க. 4 பொண்ணுங்க.

Senthils ister family

அதுல நான் 3வது தங்கச்சி. சென்னையில ஒரு தங்கச்சி இருக்காங்க. 2 அக்கா இறந்து போனாங்க. அண்ணன்க 2 பேரு இறந்து போனாங்க. இது 3வது அண்ணன் இருக்காரு. கணவர் வெளிநாடு போக வர இருக்காரு.அவரோட பேரு முருகேசன்.

சவுதியில இருக்காரு. 1 பொண்ணு 2 பையன். 2 பசங்களும் வெளிநாட்டுல தான் இருக்காங்க. அவங்களும் சவுதில தான் இருக்காங்க. பொண்ணு தீபா கட்டிக் கொடுத்தபிறகு கேன்சர் வந்து இறந்து போச்சு. அவளுக்கு ஒரு பொண்ணு மதுஸ்ரீ இங்கே இருக்குறா.

நாங்க பிறக்கும் முன்னேயே வெளியில போயிட்டாரு. எனக்கு ஒரு 5 வயசு இருக்கும். தங்கச்சிக்கு ஒரு 3 வயசு இருக்கும். அப்போ தான் திரும்பி வந்தாரு. அப்போ தான் அண்ணன் அறிமுகமானாங்க. அப்பா சொன்னாங்க.

Senthil

அக்காமாரு தான் ஒண்ணா இருந்தாங்க. மாமா பசங்களுக்கே 2 தங்கச்சியையும் கட்டிக் கொடுத்துட்டாங்க. எங்களுக்கு விவரம் தெரியும்போதே சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

பசி, தூறல் நின்னு போச்சு படங்களில் நடிச்சிருக்காங்க. ஆனா நேருல அண்ணனோட பேச கூச்சப்படுவோம். அப்பா வீடு எல்லாருமே வசதி தான்.

அண்ணன் மளிகை கடையில இருக்கும்போது அப்பா ஏதோ வஞ்சதால வெளியே போயிட்டான்னு சொல்வாங்க. எல்லாருமே கூட்டுக்குடும்பமாத் தான் இருக்கோம்.

பெரிய மகன் சதீஷ். அவருக்கு ஒரு பொண்ணு. 2வது மகனுக்கு இன்னும் பொண்ணு இல்ல. எங்க குடும்பம் வந்து பெரிய குடும்பம். பெரியப்பா, சித்தப்பா, அண்ணன் தம்பி எல்லாருமே கூட்டுக்குடும்பம். அப்பா முதல்ல மளிகைக் கடை வச்சிருந்தாங்க.

அப்புறம் கமிஷன் கடை வச்சிட்டாங்க. நெல், பருத்தி, மிளகாய் எல்லாம் வாங்கி வெளியே அனுப்பி விடுவாரு. அண்ணன் அப்பா மாதிரி பார்த்துக்குவான். அண்ணி அம்மா மாதிரி பார்த்துக்குவாங்க.

Senthil palam comedy

அண்ணனுக்கு 2 பசங்க. அவுங்களும் நல்லாருக்காங்க. அண்ணனுக்கு வாழைப்பழம் காமெடி தான் ரொம்பப் பிடிக்கும். மண்வாசனைல ஒரு காமெடி வரும். தண்ணிக்குள்ள தள்ளி விடுறது. கவுண்டமணி எட்டி உதைப்பாரு. பெரிய அண்ணன் இருந்தாங்க. இறந்துட்டாங்க. அவங்களும் அந்த அண்ணியும் நல்லா பார்ப்பாங்க. அண்ணனுக்கு 69 வயசு. எங்களுக்கு 54 வயசு.

நான் வந்து 8 வரை படிச்சிருக்கேன். எனக்கு நடிக்கிற ஆசை எல்லாம் கிடையாது. அண்ணன் கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன். அவரும் எங்கிட்ட நடிக்கறதைப் பத்தி கேட்கல. கவுண்டமணி அண்ணனை அடிக்கும்போது முதல்ல ஒரு இதுவாத்தான் இருந்துச்சு.

அப்புறம் அண்ணன் சொல்வாங்க. அது சினிமாவுக்காகத் தான். நிஜத்துக்கு இல்லம்பாங்க. கோபம் வரும். அண்ணனைப் போட்டு அடிக்கிறாங்களேன்னு. அப்புறம் புரிஞ்சுப் போச்சு.

google news
Continue Reading

More in Cinema History

To Top