Connect with us

Cinema History

இந்தக் காலத்துல நடக்குறதை அப்பவே எப்படி கணிச்சிருக்காங்கன்னு பாருங்க….சிலாகிக்கிறார் செந்தில் மகன்

80, 90களில் நகைச்சுவை ஜாம்பவானாக கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் செந்தில். இவருடைய பெரிய மகன் மணிகண்டபிரபு. இவர் பல்மருத்துவமனை வைத்துள்ளார். மருத்துவமனைக்கு தனது தந்தையின் பெயரை வைத்துள்ளார். இவர் தனது தந்தை பற்றியும், தனதுகுடும்பத்தைப் பற்றி எப்படி சொல்கிறார் என்று பாருங்க.

என் தம்பி ஹேமச்சந்திரபிரபு. அவர் சிறுத்தை சிவாவிடம் அசோசியேட் டைரக்டரா இருக்காரு. என் பொண்ணு மிருத்தி. 8ம் வகுப்பு படிக்கிறாள். எனக்கும் நடிக்கிற ஆசை எல்லாம் வந்திருக்கு. 2004ல் ஒரு படம் பண்ணிருக்கேன். உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு என்ற படம். அதுக்கு அப்புறம் நிறைய வாய்ப்புகள் வந்தது.

எங்கப்பா என்ன சொன்னாருன்னா இப்போதைக்கு படிப்பா. பியூச்சர்ல உனக்கு நடிக்கணும்னு ஆசை வந்துச்சுன்னா ஹெல்ப் பண்றேன்னாரு. படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் மேற்படிப்பு எல்லாம் படிச்சேன். அப்புறம் இந்த பீல்டே எனக்கு இன்ட்ரஸ்ட் ஆக ஆரம்பிச்சிடுச்சி. நடிப்புல எனக்கு இன்ட்ரஸ்ட் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிடுச்சு.

இங்க வந்து நிறைய கான்சன்ட்ரேட் பண்ணினேன். நிறைய அக்சீவ் பண்ணினேன். 11 வருடமாக இந்த கிளினிக் நடத்திக்கிட்டு வர்றேன். அப்பா இரக்கக் குணம் அதிகம் உள்ளவர். மனதில் ஒண்ணு வச்சிக்கிட்டு வெளியே ஒண்ணு பேசுறவரு கிடையாது. ரொம்ப சாதுவும் கிடையாது. ரொம்ப கோபக்காரரும் கிடையாது.

யாரையும் எளிதில் மன்னித்து விடுவார். எதை வேண்டுமானாலும் வெளிப்படையாகப் பேசி விடுவார். அம்மா அப்பாவுக்கு பக்கத்து ஊரு. அம்மா பேமிலில எல்லாருமே படிச்சவங்க. டீச்சர்ஸ், எச்எம் கேடர்ல இருந்தாங்க. நல்ல ஸ்கிரிப்ட் கிடைச்சா நடிப்பேன். எந்த ரோல் கொடுத்தாலும் நடிப்பவன் தான் நல்ல நடிகன். அதுக்கு உதாரணம் விஜய் சேதுபதி. ஹீரோ, காமெடியன், வில்லன் என ரோல் பேஸ் பண்ணி நடிப்பது கூடாது.

senthil, goundamani

கவுண்டமணி சார் ரொம்பவே நல்ல மனிதர். என்னோட கல்யாணத்துக்கு அவரு தான் தாலி எடுத்துக் கொடுத்தாரு. அப்பாவோட நல்ல நண்பராகத் தான் இன்று வரை இருக்காங்க. இப்பவும் அப்பா வந்து அவருக்கிட்ட அடிக்கடி கால் பண்ணி பேசத்தான் செய்வாரு.

ராமராஜன், நளினி இவங்கள்லாம் அப்பாவுக்கு ரொம்ப குளோஸ். சின்ன வயசுல அப்பாவ அடிக்கும்போது கொஞ்சம் கோபமா இருக்கும். அப்புறம் வளர வளர நானும் அதைக் காமெடியா பார்க்க ஆரம்பிச்சிட்டேன். சினிமாவுல நடக்குற விஷயத்தை வீட்ல வந்து சொல்ல மாட்டாரு. கரகாட்டக்காரன் படத்துல வாழைப்பழ காமெடி ரொம்பப் பிடிக்கும். அதே போல வெத்தலையும், பாக்கும் வாங்கிட்டு வரச் சொல்வாரு. அது ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

ஊருவிட்டு ஊரு வந்து படத்திற்காக சிங்கப்பூருக்கு என்னக் கூட்டிட்டுப் போனது எல்லாம் எனது சின்ன வயசுல நடந்தது. என்னை முதன் முதலா அப்பா அங்க வச்சித்தான் அடிச்சாரு.

அதே மாதிரி என் பொண்ணையும் நான் முதன்முதலா செல்லமா அடிச்சது சிங்கப்பூர்ல தான் அடிச்சேன். அடிக்கறதுன்னா சும்மா செல்லமா தட்டுறது. அவரு கோபமாக் கூட எங்கள எல்லாம் திட்ட மாட்டாரு. அந்தப்படத்தைப் பார்க்கும்போது அந்த நினைவுகள் எல்லாம் வரும்.

அதுல வந்து குறிப்பா ஒரு காமெடி வரும். ஒரு நாயோட வாய வந்து மந்திரம் பண்ணி கட்டிப் போட்டுருப்பாரு. நாயோட ஓனர் வருவாரு எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்ல. என் நாயோட வாய அவுத்து விட்டுட்டு என் வைப்போட வாயக் கட்டிருங்கன்னு சொல்வாரு. நான் அப்படியே என் வைப்ப பார்ப்பேன்.

Senthil, Goundamani

அந்தக்காலத்துல இருந்து இந்தக்காலம் வரைக்கும் எதுவுமே மாறல. அப்பவே கணிச்சி பக்காவா ஸ்கிரிப்ட் எழுதிருக்காங்க பாருங்க அப்படின்னு சொல்லுவேன். அவங்களும் என் கூட ரசிச்சிக்கிட்டுத் தான் பார்ப்பாங்க. அடுத்தது படையப்பாவுல வந்து ரஜினி சாரும், அப்பாவும் காமெடி பண்ணிருப்பாங்க.

இவரு தான் மாப்பிள்ளை. ஆனா இவரு போட்டுருக்குற ட்ரஸ் என்னது இல்ல…அப்படிங்கற காமெடி ரொம்பப் பிடிக்கும். அப்பாவுக்கு வந்து ரஜினி சார் ரொம்ப குளோஸ் ப்ரண்ட். இப்பவும் அவங்களுக்கு உடல்நிலை குறைவா இருந்தபோது அப்பா வந்து பார்த்துட்டு வந்தாரு. இன்னமும் அவங்க ரெண்டு பேரும் குளோஸ் ப்ரண்டு தான்.

வடிவேலு சார் அப்பாவுக்கு நல்லா மரியாதைக் கொடுப்பாரு. ஒரு ரோட கிராஸ் பண்ணினா அவங்க வீடு. எங்களுக்கும் அவரோட காமெடி எல்லாம் ரொம்பப் பிடிக்கும். அதே போல கருத்துக்கள் தெரிவிக்கிறது, அட்வைஸ் எல்லாம் செந்தில் சார் பண்ணமாட்டாருன்னு அவரோட மருமகள் பெருமையா சொல்றாங்க.

google news
Continue Reading

More in Cinema History

To Top