சாரியெல்லாம் நமக்கு என்ன புதுசா? ஓம் சாந்தி.. செஞ்ச தவறுக்காக வருந்திய சிம்பு

by Rohini |
simbu
X

simbu

Actor Simbu: தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சிம்பு. இரண்டு வயதிலிருந்தே சினிமாவில் பயணித்து வருகிறார் .கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் நடிகர் சிம்பு. சினிமாவில் அவருக்கு தெரியாத எந்த ஒரு விஷயமும் இருக்க முடியாது.

எந்த ஆங்கிளில் நிற்க வேண்டும்? கேமரா எங்கெல்லாம் இருக்கும் அதற்கேற்ற வகையில் எங்கு நின்று டயலாக் பேச வேண்டும் என்பதை மிகத் தெளிவாக அறிந்தவர் சிம்பு .சொல்லப்போனால் கமலுக்கும் சிம்புவுக்கும் இருக்கும் சிமிலாரிட்டியே இதுதான். இந்த நிலையில் கமலுடன் இணைந்து சிம்பு தக் லைப் திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஆறு மணிக்கு மேல கண்ணு தெரியாது!. சீக்கிரம் அனுப்பிடுங்க!.. அதிர்ச்சி கொடுத்த நம்பியார்..

அந்த படத்தில் கமலுக்கு மகனாக சிம்பு நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டு வருகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தான் சிம்பு நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு சிம்பவும் வருகை தந்தார். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது சிம்பு பல விஷயங்களை பகிர்ந்தார். ஆன்மீகத்திற்குள் வந்த பிறகுதான் நான் என்னையே புரிந்து கொண்டேன் எனக் கூறினார் .

இதையும் படிங்க: கதைக்கு 25000 கேட்டு வெறும் 500தான் கிடைச்சது! கமலின் சூப்பர் ஹிட் படத்துக்கு இவ்வளவுதான் மதிப்பா?

அது மட்டுமல்லாமல் உடம்பை எந்த அளவு பாதுகாக்க வேண்டும் என்பதையும் கூறினார். ஓட்டு போட ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு அந்த நேரத்தில் நான் சூட்டிங்கில் இருந்தேன். ஆனால் வராமல் இருந்தது மிகப்பெரிய தவறு தான். அப்படியே ஷூட்டிங்கை ரத்து செய்து வருவதற்கும் நான் ஒன்றும் பெரிய ஆளு இல்லை. இதன் காரணமாகத்தான் ஓட்டு போட நான் வரவில்லை என கூறினார்.

Next Story