முதல் தமிழ் ஹீரோ! சிம்பு பண்ண ஒரு நல்ல விஷயம்.. தூக்கி வச்சு கொண்டாடும் நெட்டிசன்கள்
Actor Simbu: கோலிவுட்டில் சிம்புவுக்கு என ஒரு தனி கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது. விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்த படியாக சிம்புவுக்கு ரசிகர் கூட்டம் ஏராளம். குழந்தை நட்சத்திரமாக தன் அப்பாவின் படங்களில் பெரும்பாலும் சிம்பு நடித்திருப்பார். அப்பவே சினிமாவை உண்டு இல்லை என பண்ணியிருப்பார் சிம்பு,
அந்த சிறு வயதிலேயே கேமிரா ஆங்கிள், எந்தெந்த இடத்தில் நின்றால் கேமிராவிற்கு கவர் ஆக முடியும் என்பதை அப்பவே தெரிந்து வைத்திருப்பவர் சிம்பு, கமல் எப்படி குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்று ஒரு உலக நாயகனாக மாறியிருக்கிறாரோ அதைப் போல சிம்புவும் சினிமாவை பற்றி அத்தனை நுணுக்கங்களையும் தெரிந்து வைத்திருப்பவர்.
இதையும் படிங்க: ஜெயம் ரவி-ஆரத்தி விவகாரத்து காரணம் இதானா? முக்கிய சேதியை உடைத்த பிரபலம்
அவர் எப்போது மேடையில் பேசினாலும் தன் ரசிகர்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவார். அவர்களால்தான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் என்று அடிக்கடி ரசிகர்களை பெருமை படுத்தும்விதமாக பேசிக் கொண்டே இருப்பார். அந்தளவுக்கு ரசிகர்கள் சிம்பு மீதும் சிம்பு ரசிகர்கள் மீதும் அன்பை பரிமாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நடிப்பையும் தாண்டி மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வமுடன் இருப்பவர் சிம்பு. வெள்ளக் காலத்தில் முதல் ஆளாக இருந்து பல்வேறு வெள்ள நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறார். அதை போல் சமீபத்தில் ஆந்திராவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதையும் படிங்க: தளபதி 69-ல் மாஸ்டர் படத்தின் பிரபலம்!.. தட்டி தூக்கிய ஹெச்.வினோத்!.. பக்கா பிளான்!…
அதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக ஆந்திரா முதலமைச்சர் நிதிக்கு 6 லட்சம் அனுப்பியிருக்கிறாராம் சிம்பு, அதுவும் இதுவரை கோலிவுட்டில் இருந்து ஆந்திரா மக்களுக்காக வெள்ள நிவாரண நிதியாக யாரும் கொடுக்கவில்லையாம்.
முதல் தமிழ் ஹீரோவாக சிம்புதான் நிதியுதவி செய்திருப்பதாக தெரிகிறது. இத்தனைக்கு ஆந்திராவில் சூர்யா மற்றும் விக்ரமுக்கு மார்கெட் அதிகம். அவர்களும் இதுவரை எந்தவொரு உதவியும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதனால் சிம்புவின் இந்த செயலை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் அவரை தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரசாந்த் நடிக்கிறாருனு சொன்னதும் டென்ஷனான விஜய்! சொன்ன காரணம்தான் ஹைலைட்