படம் கன்ஃபார்ம் ஹிட்டு!.. செம ஸ்டைலா கெத்தா மாறிட்டாரே சிம்பு!.. வைரல் போட்டோ!..

Silambarasn: அப்பா டி.ராஜேந்தர் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர்தான் சிம்பு என்கிற சிலம்பரசன். அதுவும் சின்ன வயதில் நடிக்கும்போதே லிட்டில் சூப்பர்ஸ்டார் என அவரை அமர்க்களமாக அறிமுகம் செய்தார் டி.ஆர். சின்ன வயதிலேயே தனது நடிப்பால் சில ஹிட் படங்களை கொடுத்தார் சிம்பு.
அதன்பின் ‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் ஹீரோவாக மாறினார். கடந்த 21 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். பல வெற்றிப்படங்களையும் கொடுத்திருக்கிறார். ஒருபக்கம், படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் என்கிற புகாரும் அவர் மீது இருக்கிறது. அதோடு, இவரை வைத்து பல பஞ்சாயத்துகளும் நடக்கும். அந்த அளவுக்கு சேட்டைகளை செய்வார்.
இதையும் படிங்க: 12 நாளில் இத்தனை கோடி வசூலா?!.. வசூலில் அடிச்சி தூக்கிய அயலான்!..
கடந்த 10 வருடங்களில் எடுத்துக்கொண்டால் அவர் பெரிய ஹிட் கொடுத்தது விண்ணை தாண்டி வருவாயா மற்றும் மாநாடு ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே. ஆனாலும், அவருக்கான ரசிகர் கூட்டம் இன்னமும் குறையவில்லை. சிம்பு படத்தின் அப்டேட் எப்போது வரும் என அவர்கள் காத்திருக்கிறார்கள்.

simbu
பத்து தல படத்திற்கு பின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமானார். பட அறிவிப்பு வெளியாகி 6 மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை.
ஆனால், அது ஒரு ஹிஸ்டாரிக் படம் எனவும் அதற்காக சிம்பு துபாயில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் எனவும் இப்படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்திலேயே நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
ஒருபக்கம், அவ்வப்போது செம ஸ்டைலான லுக்கில் சிம்புவின் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது. அந்த வகையில், சிம்புவின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.