Connect with us

Cinema News

அது எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் செட் ஆகும்!. வேற எவனுக்கும் வராது!.. ஓப்பனா சொன்ன சிவாஜி!..

எம்.ஜி.ஆரும், சிவாஜியும் திரையுலகில் போட்டி நடிகர்களாக பார்க்கப்பட்டாலும் அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல புரிதலும், அன்பும், நட்பும் இருந்தது. இருவருமே சிறு வயதிலேயே நாடக கம்பெனிக்கு சென்றவர்கள். எம்.ஜி.ஆர் 30 வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு பின்னர் சினிமாவுக்கு போனார்.

10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்த எம்.ஜி.ஆர் ராஜகுமாரி திரைப்படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். சிவாஜியோ பராசக்தி திரைப்படம் சினிமாவில் நடிக்க துவங்கியவர். எம்.ஜி.ஆர் சரித்திர கதை, ஆக்‌ஷன் ஆகியவற்றை கையில் எடுத்தார். சிவாஜியோ நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு ‘நடிகர் திலகம்’ பட்டம் கொடுத்தது யாருன்னு தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கா?

எம்.ஜி.ஆர் படத்தில் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக அவரின் படங்களில் இடம் பெற்றும் வாள் வீச்சு சண்டை காட்சிகள் அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கும். எம்.ஜி.ஆர் வாள் மற்றும் கத்தி சண்டையை முறைப்படி பயின்றவர் என்பதால் மிகவும் லாவகமாக அந்த காட்சிகளில் நடிப்பார். எம்.ஜி.ஆர் படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்க காரணமாக அமைந்ததற்கு காரணமும் இதுதான்.

அதேபோல், சிவாஜி சிறந்த நடிகராக வளர்ந்து கொண்டிருந்தார். விதவிதமான கதாபாத்திரங்கள், விதவிதமான கெட்டப்புகளை போட்டு நடிகர் திலகமாக மாறினார். சிவாஜி சிறந்த நடிகர் என்பதை எம்.ஜி.ஆரே பல மேடைகளில் பேசி இருக்கிறார். சிவாஜியை போல என்னால் நடிக்க முடியாது. என் பாணி வேறு. அவர் பாணி வேறு என சொன்னவர்தான் எம்.ஜி.ஆர்.

mgr

அதேபோல், சிவாஜியும் எம்.ஜி.ஆரை பாராட்டி பேசுவார் ‘வாள் வீச்சு என்பது நடிப்பை போலவே ஒரு கலை. அந்த கலையில் அண்ணன் எம்.ஜி.ஆர் அபார திறமை பெற்றவர். அவரை போல வாள் வீசி நடிக்கும் ஒரு நடிகரை நான் பார்த்தது இல்லை. அவரை போல வாள் வீச முயற்சி செய்த பல நடிகர்கள் மூக்கை கிழித்து கொண்டதுதான் மிச்சம். வாள் வீச்சு அவரின் தனித்திறமை. இதில், அவரிடம் யாரும் நெருங்க முடியாது’ என கூறினார் நடிகர் திலகம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top