Cinema History
பாடல்களே இல்லாமல் சிவாஜி நடித்த ஒரே திரைப்படம்!.. விருதுகளை குவித்த மிஸ்ட்ரி திரில்லர்!..
sivaji ganesan: 1930களிலிருந்து சினிமா என்பது மக்களிடம் பிரபலமாக துவங்கியது. நாடகத்திலிருந்து சினிமா வந்ததாலோ என்னவோ அதிக வசனங்களும், பாடல்களும் அப்போது திரைப்படங்களில் இடம் பெற்றிருந்தது. அப்படிப்பட்ட நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர்தான் செவாலியர் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சரித்திர கதை முதல் சாமானியனின் வாழ்க்கை வரை பல கதபாத்திரங்களிலும் அசத்தியிருக்கிறார்.
ரவுடி, நல்லவன், ஏழை, பணக்காரன், நடுத்தர வாழ்க்கை வாழ்பவன், மருத்துவர், என்ஜினியர், ஏழை தொழிலாளி, முதலாளி என சாதரண மனிதராகவும் கடவுள் அவதாரங்கள், பாரதியார், வ.ஊசி, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜ ராஜ சோழன் போன்ற சரித்திர வேடங்களிலும் கர்ணன், திருவருட்செல்வர் போன்ற இலக்கியங்களில் வந்த கதாபாத்திரங்களிலும் நடித்த ஒரே நடிகர் சிவாஜி மட்டுமே.
இதையும் படிங்க: உங்க படத்தை ஓட வச்சதே நாங்கதான்…நண்பன்னு கூட பார்க்காம வெளுத்து வாங்கிய சிவாஜி…
சிவாஜி படங்கள் என்றாலே பாடல்கள் சிறப்பாக இருக்கும். பாடல்களில் அவர் காட்டும் உடல் மொழியும், ஸ்டைலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். ஆனால், அவர் பாடல்களே இல்லாத ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?. அப்படி உண்மையில் நடந்தது.
பராசக்தி படம் வெற்றியடைந்ததும் அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. எனவே, பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். அப்போது. எஸ். பாலச்சந்தர் என்பவர் ‘அந்த நாள்’ என்கிற கதையை சிவாஜியிடம் சொன்னார். அது மிஸ்ட்ரி திரில்லர் கதை. அப்போது ஒரு படம் நடிக்க ஹீரோக்கள் 2 மாதங்கள் கால்ஷீட் கொடுப்பார்கள். ஆனால், சிவாஜி அந்த படத்திற்கு 14 நாட்கள் மட்டுமே கொடுத்தார்.
இதையும் படிங்க: சிவாஜிக்கே நடிப்பு சொல்லி கொடுத்த தளபதி.. கடுப்பான சிவாஜி என்ன செஞ்சாரு தெரியுமா?..
இயக்குனர் எஸ்.பாலச்சந்தர் சரியான திட்டமிடலில் அந்த படத்தை 14 நாட்களில் எடுத்து முடித்துவிட்டார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்த படம் 1954ம் வருடம் வெளியானது. இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது.
முதல் ரிலீஸில் இப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றாலும் 2வது, 3வது ரிலீஸில் ஓரளவுக்கு லாபத்தை கொடுத்தது. அதோடு, தேசிய விருதின் பிரிவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதும் கிடைத்தது. இப்படத்தின் மொத்த நீளமே 1.30 மணி நேரம்தான். இந்த படத்தில் சிவாஜியின் மனைவியாக பண்டரிபாய் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: கமலுக்கு கிடைத்த வாய்ப்பு சிவாஜிக்கு இல்லையே… அதனால் தான் இந்த படத்துக்கு இத்தனை லேட்டா?