நடிகர் சிவகார்த்திகேயன் தனது கையில் வைத்திருக்கும் படங்களின் லைன் அப் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமரன் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது, நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
மேலும் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. படம் வெளியானது முதலே திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் இந்த திரைப்படம் வெளியாகி ஒன்பது நாளில் உலக அளவில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்து இருக்கின்றது. சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் அமரன் திரைப்படம் தான்.
இதையும் படிங்க: Biggboss Tamil 8: இந்த வாரம் ‘டபுள்’ எவிக்சன்… வெளியேற போவது இவங்களா?..
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார். ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. இதற்கு அடுத்ததாக டான் திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ் கே 24 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
இதனை அவரே சமீபத்திய பேட்டியில் உறுதி செய்திருந்தார். இதற்கு அடுத்ததாக சுதா கோங்குரா இயக்கத்தில் புறநானூறு என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் சமீபத்திய பேட்டியில் ஜிவி பிரகாஷ் புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதை உறுதி செய்திருந்தார்.
அதற்கு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த திரைப்படங்கள் அனைத்துமே ஏறத்தாழ உறுதியாகி இருக்கின்றது. இது மட்டும் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், குட்நைட் திரைப்படத்தின் இயக்குனர் விநாயகர் சந்திரசேகரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: Biggboss Tamil 8: என்னடா நடக்குது இங்க!.. மழையில் ஆட்டம் போடும் காதல் பறவைகள்.. வீடியோ பாருங்க!..
தொடர்ந்து சினிமாவில் ஏறத்தாழ ஒரு டஜன் திரைப்படங்களை கையில் வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். அமரன் திரைப்படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை ஒரு முன்னணி இடத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றது. இதனால் கதைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். தனுஷால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் சிவகார்த்திகேயன் தனுஷுக்கு இணையாக தற்போது ஏகப்பட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…