More
Categories: Cinema History Cinema News latest news

எம்.ஜி.ஆர் அப்படி கேட்பார்னு எதிர்பார்க்கவே இல்ல!.. அழுதே விட்டேன்.. உருகும் சிவக்குமார்….

Actor MGR: சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி மாபெரும் ஆளுமையாக இருந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். ஒரு மாண்புமிகு தலைவராக மனிதாபிமானம் கொண்ட மனிதராக ஏழை எளிய மக்களிடம் சகஜமாக பழகும் தன்மை கொண்டவராக மொத்தத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு மனிதராகவே எம்ஜிஆர் இருந்திருக்கிறார்.

எம்ஜிஆரின் மனிதாபிமானத்திற்கு சிறந்த உதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார். 1967 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘காவல்காரன்’. ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை நீலகண்டன் இயக்கியிருந்தார்,

Advertising
Advertising

இதையும் படிங்க: இந்த ஆண்டு வெளியான இத்தனை படங்கள் ஃபிளாப்பா?.. ப்ளூ சட்டை மாறன் லிஸ்ட்ல அந்த படம் தான் ஹிட்டா?

இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு தம்பியாக நடித்திருப்பார் சிவக்குமார். அதனால் எம்ஜிஆருடன் கொஞ்சம் பேசக் கூடிய சந்தர்ப்பம் சிவக்குமாருக்கு கிடைத்திருக்கிறது. தன் அம்மா கையில் அடிபட்டு ஆறு மாத காலம் வீட்டில் கஷ்டப்பட்டிருந்த நேரத்திலும் என்னிடம் சொன்னால் எங்கே என் சினிமா கெரியர் பாழாகிவிடுமோ என்ற காரணத்தினால் என்னிடம் என் அம்மா சொல்லவே இல்லை என்ற தன் சொந்த கதையை சிவக்குமார் எம்ஜிஆரிடம் கூறியிருக்கிறார்.

இது நடந்து முடிந்து சில மாதங்களிலே எம்ஜிஆர் குண்டடி பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதை கேட்ட சிவக்குமாருக்கு உடனே எம்ஜிஆரை பார்க்க வேண்டும் என்ற படபடப்பு இருக்க யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லையாம். இருந்தாலும் அவரை பார்க்க போகிறவர்கள் உள்ளே இருக்கும் ஒரு ரெஜிஸ்டர் நோட்டில் கையெழுத்திட்டுத்தான் பார்க்க போனார்களாம்.

இதையும் படிங்க: அஜித்லாம் பேசவே மாட்டாரு! விஜய் வெட்கப்படுவாரு.. 90களில் குத்தாட்டம் போட்ட நடிகை சொன்ன சீக்ரெட்

அப்படி எம்ஜிஆரை சிவக்குமார் இரண்டு முறை பார்த்திருக்கிறார். இருந்தாலும் மூன்றாவது முறையாக பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசையோடு இருக்க அங்கே ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் இருந்தாராம். ஏற்கனவே காவல்காரன் படத்தை தயாரித்தவர் என்பதால் சிவக்குமாரை அவர் அறிந்து கொண்டார்.

அவர் உதவியுடன் சிவக்குமார் எம்ஜிஆரை பார்க்க சென்றாராம். சிவக்குமாரை பார்த்ததும் எம்ஜிஆர் ‘ நீ சிவக்குமார் தானே?’ என கேட்டதும் இவருக்கு ஒரே ஷாக். அந்த ஒரு படத்தில் தான் பார்த்திருக்கிறார். அதுவும் மூன்றுமணி நேரம்தான் பழகியிருப்ப்போம். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்தளவு நியாபகம் வைத்து கேட்கிறாரே என்று சிவக்குமார் நினைக்க அவரை மேலும் ஆச்சரியமாக்கினார் எம்ஜிஆர்.

இதையும் படிங்க: என்னங்க பண்றீங்க ஷிவானி!.. அதுக்குள்ளலாம் வெயிட் லிஃப்ட்டை விட்டு எடுக்குறீங்க!.. வேறமாறி வீடியோ!..

சிவக்குமாரிடம் ‘உன் அம்மா கை இப்போ எப்படி இருக்கிறது?’ என்று கேட்டதும் சிவக்குமார் கண்களில் கண்ணீர் ததும்ப நீர் கொட்டியதாம். இப்படி ஒரு மனுஷனா என்று ஒரு கட்டுரையில் சிவக்குமார் இந்த தகவலை கூறியிருக்கிறார்.

Published by
Rohini