முகத்தை காரணம் காட்டி சிவக்குமாரை விட்டு கை நழுவிப் போன சூப்பர் ஹிட் படம்! அவருக்கு என்னப்பா?
Actor Sivakumar: தமிழ் சினிமாவில் ஒரு ஒப்பற்றக் கலைஞராக திகழ்பவர் நடிகர் சிவக்குமார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் சினிமா பயணத்தில் ஏகப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார். நடிப்பையும் தாண்டி சொற்பழிவு ஆற்றுவதிலும் வல்லவர் சிவக்குமார்.
பல மேடைகளில் வரலாற்றுக் கதைகளை சொற்பழிவுகளாக பேசி ரசிகர்களை மெய்மறக்க செய்பவர். ஆரம்பத்தில் ஒரு ஓவியராகத்தான் இருந்திருக்கிறார். ஓவியம் வரைவதில் கில்லாடியான சிவக்குமார் தன்னுடைய ஓவியங்களை கண்காட்சிக் கூடமாகவும் வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஒத்த போஸ்டர்ல மொத்த சோலியும் முடிச்சிட்டீங்களே!.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கதை இதுதானா!
காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சிவக்குமாருக்கு கந்தன் கருனை என்ற படம்தான் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தில் முருகனாக கதாபாத்திரம் ஏற்று பார்ப்பதற்கு அசல் முருகனை போலவே மக்களால் அறியப்பட்டார்.
இருந்தாலும் அந்தப் படத்திற்கு வரிசையாக படங்களின் வாய்ப்பு வந்ததா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பல போராட்டங்களை சந்தித்த பின் தான் சிவக்குமார் ஒரு முன்னனி நடிகராக மாறினார்.
இதையும் படிங்க: மூஞ்சியே காட்டாமல் முன்னழகை மொத்தமாக காட்டிய நயன்தாரா!.. ஆனா இதுலயும் பிசினஸ் இருக்கா?..
தமிழ் சினிமாவின் முதன்மையான நகைச்சுவை படம் என்று கொண்டாடும் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிவக்குமார்தானாம். காலத்தால் என்றும் அழியாத ஒரு அழகான காதல் ஓவியமாக இந்தப் படம் அமைந்தது.
இந்தப் படத்தை ஸ்ரீதர் இயக்க முதலில் சிவக்குமாரைத்தான் நடிக்க வைக்க எண்ணியிருக்கிறார். ஆனால் இது முழுவதும் காதல் சம்பந்தப்பட்ட படம் என்பதால் சிவக்குமார் செட் ஆக மாட்டார் என்று அவருக்கு தோன்றியதாம். அதற்கு காரணம் சிவக்குமாரின் குழந்தைத்தனமான முகம்தான்.
இதையும் படிங்க: இப்படியே போனா எல்லா படமும் ரெண்டு பார்ட்டுதான்!.. தயாரிப்பாளர்களை கதறவிடும் ஷங்கர்…
அதன் பிறகு தெலுங்கில் முன்னனி நடிகராக இருக்கும் மகேஷ்பாபுவின் தந்தையான கிருஷ்ணாவையும் மனதில் நினைத்தாராம். ஆனால் மொழிப் பிரச்சினையால் அவரையும் விட்டுவிட்டு கடைசியாகத்தான் ரவிச்சந்திரன் இந்தப் படத்திற்குள் வந்திருக்கிறார். ஆனால் ரவிச்சந்திரனை விட வேறு யார் நடித்தாலும் இந்தக் கதைக்கு பொருந்தியிருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
ரவிச்சந்திரனுக்கும் சரி ஸ்ரீதருக்கும் சரி அவர்களின் சினிமா கெரியரில் மறக்க முடியாத படமாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் அமைந்தது.