செஞ்ச தப்புக்காக வாத்தியாரா மாறின சூரி!… அதெப்படி திமிங்கலம் முடியும்…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராய் அறிமுகமானவர் நடிகர் சூரி. இவர் தனது இளம் வயதிலிருந்தே சினிமாவில் நடித்தாலும் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவரின் காமெடி நிறைந்த கலகலப்பான நடிப்பின் மூலம் இவருக்கென தனி ரசிகர்களையும் சம்பாதித்தார்.

இவர் வருத்தபடாத வாலிபர் சங்கம், மனம் கொத்தி பறவை, எங்க வீட்டு பிள்ளை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சூரி மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த படங்கள் அனைத்திலுமே காமெடிகள் நல்ல வரவேற்ப்பை பெற்றன.

இதையும் படிங்க: முயற்சியே இல்லாம போன விடாமுயற்சி… அப்புறம் எங்க இருந்து சம்பளத்தை எதிர்பார்க்குறது…

இவர் பின் தனது முயற்சியினால் கதாநாயகனாக நடிக்க தொடங்கியுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார். மேலும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ மேனன் நடித்துள்ளார்.

அறிமுகமான முதல் படமே இவருக்கு பெரும் வெற்றியை தேடி தந்தது. இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி கொண்டு வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி கலிய பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மக்கள் படை இயக்கத்தின் தலைவரும் ஆவார்.

இதையும் படிங்க: என் படத்தை எனக்கே போட்டு காட்டினாலும் நீதான்டா அடுத்த ஆடு! ‘ஜவான்’ வெற்றி கமலை எப்படியெல்லாம் மாத்திடுச்சு?

விஜய் சேதுபதியின் மேல் ஏற்பட்ட தவறான கண்ணோட்டத்தால் அவரை போலிஸில் மாட்டி விடுகிறார் சூரி. இதுவரை முதல் பகமாகும். பின் இதன் இரண்டாம் பாகத்தில் அவர் மேல் தவறு இல்லை என அறிந்து கொள்கிறார். ஆனால் விஜய் சேதுபதியை சுட்டுபிடிக்க சூரியிடமே அதிகாரம் வழங்கப்படுகிறது. அதற்கு சம்மதிக்காத சூரி அவரை சுட வேண்டாம் என நினைக்க ஆனால் சூரியின் உடன் இருந்த போலிஸ் அவரை சுட்டு விடுகிறார்.

இதனால் மன வருத்தத்தில் இருந்த சூரி கலிய பெருமாள் வாத்தியாரை சுட்டு கொன்ற போலிஸை சுட்டு விட்டு காட்டுக்குள் சென்று விடுகிறார். பின் இவரே கலிய பெருமாள் வாத்தியாராக மாறிவிடுகிறாராம். இவ்வாறாக இரண்டாம் பாகம் காட்சிபடுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விடுதலை இரண்டாம் பாகத்தில் சூரியின் காட்சிகள் முடிவடைந்த நிலையில் விஜய் சேதுபதியின் பாகங்கள் தயாராகி கொண்டு வருகின்றனவாம். விடுதலை1 போலவே இரண்டாம் பாகமும் வெற்றி அடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: அவங்களுக்கு வெண்ணெய்.. எங்களுக்கு சுண்ணாம்பா… டாப் நாயகர்களுக்கு ரெட் கார்டு… ஆட்டம் காணும் கோலிவுட்?!

 

Related Articles

Next Story