Cinema History
எல்லாமே வேஷம்.. அஜித் மோசமான ஆளு!.. எனக்கு பிடிக்காது!.. பகீர் கிளப்பும் பிரபல நடிகர்…
அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அஜித். பல திரைப்படங்களிலும் கதாநாயகியை காதலிக்கும் சாக்லேட் பாய் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர்தான் அஜித். பல வருடங்கள் சாக்லேட் பாயாக நடித்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் படங்களிலும் நடிக்க துவங்கினார்.
அப்போதுதான் அவருக்கு ரசிகர்கள் உருவாக துவங்கினார்கள். அதிலும், பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது. இப்போது விஜய்க்கு அடுத்து அதிக ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகராக அஜித் மாறி இருக்கிறார். இத்தனைக்கும் தனது ரசிகர் மன்றங்களையே கலைத்துவிட்டார்.
இதையும் படிங்க: அசிங்கமாக கேலி செய்த சொந்த ஊர்க்காரர்கள்!.. எம்.ஜி.ஆர் வளர்ந்த பின் நடந்தது இதுதான்!..
ஆனாலும் ரசிகர் கூட்டம் குறையவில்லை. இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்கிற படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த படத்தை முடித்தபின்னர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
பொதுவாக அஜித் என்றால் மிகவும் பண்பானவர், ஜென்டில்மேன், மிகவும் நல்லவர் என்கிற இமேஜ்தான் உள்ளது. ஆனால், இதை சுக்குநூறாக உடைக்கிறார் காமெடி நடிகர் டெலிபோன் ராஜ். பல படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது பல அஜித் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: ரஜினிக்காக தொடர்ந்து அஜித்தை காலி செய்யும் லைகா… மீண்டும் தள்ளிப்போன விடாமுயற்சி?
அஜித் எனக்கு பிடிக்காது. ஒருமுறை ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது நடிகை ரோஜா, ரமேஷ் கண்ணா, நான் உள்ளிட்ட சிலர் அஜித்துடன் குரூப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என ஆசையாக அவரிடம் கேட்டேன். ஆனால், முடியாது என மறுத்துவிட்டு வேகமாக காரில் ஏறி சென்றுவிட்டார். நடிகர்களாகிய எங்களுக்கே இதுதான் நிலை.
அவரை நல்லவர் என சொல்லவே சமூகவலைத்தளங்களில் ஒரு கூட்டம் வேலை செய்கிறது. மற்றபடி அவர் ஒன்றும் அவ்வளவு நல்லவர் எல்லாம் கிடையாடு்’ என டெலிபோன் ராஜ் கூறினார். ஒரு காமெடி காட்சியில் தோசை எப்படி இருக்கவேண்டும் என வடிவேலு கிளாஸ் எடுத்தபின்னரும் ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்’ என சொல்வாரே அவர்தான் இந்த டெலிபோன் ராஜ்.