எங்க போனாலும் பார்க்கிங் பஞ்சாயத்து!.. 20 ஆயிரம் சதுர அடியில் பெரிய வீடு கட்டும் வடிவேலு!..

Vadivelu: சினிமா ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்த வடிவேலு ராஜ்கிரண் அலுவலகத்தில் தஞ்சம் ஆனார். அங்கு எடுபிடி வேலைகளை செய்து வந்த அவருக்கு என் ராசாவின் மனசிலே படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க ராஜ்கிரண் வாய்ப்பு கொடுத்தார். அதன்பின் சின்னகவுண்டர் படத்தில் படம் முழுவதும் தனக்கு குடைபிடிக்கும் வேடத்தை அவருக்கு விஜயகாந்த் கொடுத்தார்.
அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து விஜயகாந்த் நடித்த படங்களில் வடிவேலுவுக்கு சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. போட்டு கொள்வதற்கு சரியான உடை கூட இல்லாத வடிவேலுக்கு வேஷ்டி, சட்டைகளையும் விஜயகாந்த் வாங்கி கொடுத்தார். இப்படி வளர்ந்தவர்தான் வடிவேலு.
இதையும் படிங்க: விஜயகாந்தை கடைசிவரை பார்க்க விடல!.. வசனகர்த்தா லியாகத் அலிகான் உருக்கம்…
ஆனால், பின்னாளில் பெரிய காமெடி நடிகரானபின் விஜயகாந்தை அவர் மதிக்கவில்லை. அதோடு, அவரை அவன். இவன் என்றும் பேச துவங்கினார். ஒருமுறை அவரின் வீட்டின் விஜயகாந்தின் கட்சி தொண்டர்கள் காரை நிறுத்தி வைக்க, வடிவேலு அவர்களிடம் சண்டைக்கு போனார். அதில், கோபமடைந்த விஜயகாந்தின் ஆட்கள் வடிவேலு வீட்டில் கல்லெறிந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து விஜயகாந்தை திட்டுவதற்காகவே திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போனார். அதில், விஜயகாந்த் மீது இருந்த மொத்த வன்மத்தையும் கக்கினார் வடிவேலு. ‘குடிகாரன்.. அவன்.. இவன்’ என மிகவும் கீழ்த்தரமாக விஜயகாந்தை விமர்சித்து பேசினார். ஆனால், அந்த தேர்தலில் விஜயகாந்தின் கட்சி பல இடங்களிலும் வெற்றி பெற்று சட்டசபையில் எதிர்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் மாறினார்.
இதையும் படிங்க: நான் சாகுறதுதான் சரி!. பிரேமலதாவிடமே சொன்ன விஜயகாந்த்… இது எப்ப நடந்தது தெரியுமா?!..
இப்போது விஜயகாந்தின் மரணத்திற்கு கூட வடிவேலு செல்லவில்லை. ஒரு இரங்கல் செய்தியை கூட அவர் வெளியிடவில்லை. கடந்த பல வருடங்களாகவே வடிவேலு மதுரையில் கூட்டு குடும்பமாகவே வசித்து வருகிறார். ஆனால், வீட்டுக்கு செல்லும் வழி குறுகலாக இருப்பதால் காரில் செல்லமுடியவில்லை. இதனால், அந்த தெருவில் வசிப்பவர்களோ அவருக்கு அடிக்கடி சண்டையும் வந்துள்ளது.
எனவே, வேறு ஒரு இடத்தில் சுமார் 20 ஆயிரம் அடி நிலப்பரப்பில் ஒரு புதிய வீட்டை வடிவேலு கட்டி வருகிறார். இந்த வீட்டில் 20 அறைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மகள்கள், மகன், பேரக்குழந்தைகள் என எல்லோரும் இந்த வீட்டில் வசிக்கவுள்ளனர்.
இதையும் படிங்க: வடிவேலு மட்டும் மதுரை வந்தா வெட்டுறதுல தப்பே இல்ல… கொதித்தெழுந்த விஜயகாந்த் மேனேஜர்..