வளர்த்துவிட்ட இயக்குனரையே காலவாறிய வடிவேலு… பின்ன சாபம் சும்மா விடுமா?...
Actor vadivelu: தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. இவர் என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். பின் என் ராசாவின் மனசிலே, தேவர் மகன் போன்ற திரைப்படங்களின் மூலம் தனது காமெடியான நடிப்பினை மெல்ல மெல்ல வெளிக்கொண்டுவந்தார்.
பின் வரவு எட்டணா, செலவு பத்தனா போன்ற திரப்படங்களின் மூலம் தனது காமெடிகளை மக்களை ரசிக்க வைத்தார். மேலும் தனது காமெடிக்கென தனி ரசிகர் பட்டாளத்தியே உருவாக்கினார். இவரின் நடிப்பில் வெளியான தவசி, பிரண்ட்ஸ், தலைநகரம் போன்ற திரைப்படங்களின் தனது காமெடிகளின் மூலம் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
இதையும் படிங்க:ஆடியோ லாஞ்ச் போனா என்ன!.. ரசிகர்களை சந்திக்க வரும் விஜய்!.. பெரிய சம்பவத்துக்கு ரெடியாகும் தளபதி…
பின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தனது காமெடிகளை வெளிப்படுத்தினார். இப்படம் இவருக்கு வெற்றியையும் தேடி தந்தது. ஆனால் இப்படம் வெற்றியை தந்தாலும் இதற்கு அடுத்து வெளியான இந்திரலோகத்தில் நா அழகப்பன், எலி போன்ற திரைப்படங்கள் இவருக்கு தோல்வியையே தழுவி தந்தன.
இவரின் காமெடிகள் பொதுவாக வெற்றி பெற காரணம் இவர் காமெடிக்காக தனது ஊர்க்காரர்களையே பயன்படுத்துவார். இவரின் வார்த்தைகளும் இவரின் முக பாவனைகளும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படி இருந்தது. ஆனால் இப்படி ஒரு முகம் இருப்பதையே மறந்த இவர் பின் தனது இன்னொரு முகத்தையும் காட்ட ஆரம்பித்தார்.
தான் வளரும் காலங்களில் தன்னுடன் உடன் நடித்த காமெடி நடிகர்களை அவர்களின் கஷ்ட காலங்களில் கூட எவ்வித உதவியும் செய்யாமல் புறக்கணித்து வந்தார். முதல்வன், காதலன் போன்ற திரைப்படங்களில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் ஷங்கர் இவரை நடிக்க வைத்திருந்தார்.
இதையும் படிங்க:ரசிகர்கள் கத்தினது வீண் போகல!.. அட விஜயே தேதியோட சொல்லிட்டாரே!.. வெளியாகும் லியோ டிரெய்லர்…
மேலும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்திற்கு இயக்குனர் ஷங்கர்தான் தயாரிப்பாளர். மேலும் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் பேச்சை கேட்காமல் வாக்குவாதம் செய்து படத்தை விட்டு விலகினார். இதனால் ஷங்கருக்கு பெரிய நஷ்டமும் ஏற்பட்டது. இவர் தன்னை வளர்த்த இயக்குனர் ஷங்கரிடமே பணாமோசடிகள் செய்து அவரை மிகவும் கஷ்டப்படுத்தினார்.
இப்படி தனது இன்னொரு முகத்தை காட்டிய வடிவேலுவால் மீண்டும் தனது பழைய காமெடிகளை தரமுடியவில்லை. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சந்திரமுகி2 திரைப்படத்தில் இவரின் காமெடிகள் ரசிக்கும்படி இல்லை. ஒரு காலத்தில் இயல்பாக இருந்த இவருக்கு தற்போது தலைக்கணம் முற்றி போனதே இதற்கு முக்கிய காரணம் என நெட்டிசன்கள் மத்தியில் கருத்துகள் உலாவுகின்றன. மேலும் இயக்குனர் ஷங்கருக்கு இவர் செய்த துரோகமே சாபமாக மாறி இருக்கிறது என்றும் பேசப்படுகிறது.
இதையும் படிங்க:அசினுடன் ஷூட்டிங்!.. கேரவானுக்கு பின்னாடி விஜய் செஞ்ச காரியம்!.. அதிர்ந்து போன படக்குழு!..