Cinema News
கேப்டனை பேசி நாசமா போச்சு! அடுத்து விஜயா? சொம்பு தூக்கியா மாறிய வடிவேலு..
Actor Vadivelu: இண்டர்நெட் உலகின் மாபெரும் ஸ்டார் என்று வடிவேலுவை குறிப்பிடலாம். ஏனெனில் இவருடைய மீம்ஸ்தான் இன்றைய இளைஞர்களுக்கு கருத்துக்களை பகிர்வதற்கு உதவுகிறது. அவர் சினிமாவில் நடித்தாலும் நடிக்காவிட்டாலும் அவருடைய காமெடிகள்தான் இன்றுவரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. எந்த சூழ்நிலையிலும் வடிவேலுவின் காமெடியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2011 ஆம் ஆண்டுக்கு முன்புவரை தமிழ் சினிமாவின் தனிக்காட்டு ராஜாவாக காமெடியில் கலக்கி வந்த வடிவேலு கருணாநிதிக்கு ஆதரவாக தேர்தலில் அதே ஆண்டு பிரச்சாரம் செய்தார். தீவிர பிரச்சாரம் செய்த வடிவேலு தன்னை தூக்கிவிட்ட கேப்டனையும் கண்டபடி வசைபாடினார். அது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. ஆனால் வடிவேலுவின் துரதிர்ஷ்டம் அந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றிப் பெற்றார்.
இதையும் படிங்க: வழக்கம் போல பெரியவரு உலறிட்டாரு! ‘கோட்’ படத்தின் முக்கியமான சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட கங்கை அமரன்
அதனால் ஜெயலலிதாவிற்கு பயந்தே வடிவேலுவுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுக்க பல பேர் தயங்கினார்கள். இதனால் சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தார் வடிவேலு. அதன் பிறகு மீண்டும் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அவர் நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும் வகையில் போகவில்லை. மாமன்னன் திரைப்படம் மட்டும் ஓரளவு வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வடிவேலு கருணாநிதியின் சமாதிக்கு சென்று இது சமாதி இல்லை .சன்னதி என்று கூறியது பெரும் வைரலானது.அதுமட்டுமில்லாமல் எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக இருந்தாலும் கலைஞரின் தீவிர பக்தன் என்று வடிவேலு கூறியது அனைவர் மத்தியிலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக மாறியது. அதுவும் இப்போது ஆளும்கட்சிக்கு வடிவேலு மிகவும் நெருக்கம் என்பதால் ‘தங்களால் பாதிக்கப்பட்ட வடிவேலுவுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்’ என அரசியலில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறதாம்.
இதையும் படிங்க: ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து திடீரென விலகிய நடிகர்! உள்ளே எண்ட்ரி ஆகும் ரஜினி வெறியன்.. யார் தெரியுமா?
இன்னும் கூடுதலாக அவரை ஒரு வேட்பாளராகவும் நிற்க வைக்க வேண்டும் என்ற முடிவிலும் இருப்பதாகவும் அதற்கு வடிவேலு க்ரீன் சிக்னல் காட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் வடிவேலுவை வைத்து விஜய்க்கு அம்பு விடப் போகிறார்களா? என்றும் வடிவேலுவால் ஒன்றும் பண்ண முடியாது என்றும் கமெண்டில் கூறி வருகிறார்கள். ஏற்கனவே விஜயகாந்தை பேசி அவர் என்ன நிலைமையில் இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும். இப்பொழுது விஜயா?
ஏற்கனவே விஜய் அரசியலுக்குள் வர இருப்பதால் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜயை எதிர்த்து பேச ஒரு ஆள் தேவை. விஜயகாந்தையே வார்த்தைகளால் பந்தாடிய வடிவேலு விஜயை பந்தாட மாட்டாரா என நினைத்துக் கூட வடிவேலுவை தங்கள் கட்சிக்குள் அழைத்திருக்கலாம் என அரசல் புரசலாக பேசப்படுகிறது. ஒரு வேளை இதற்கெல்லாம் சம்மதித்து வடிவேலு இறங்கினால் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு பறி போகவும் வாய்ப்பிருக்கிறது என்றும் ஒரு சிலர் கூறி வருகிறார்கள்.