Connect with us
vadivelu

Cinema History

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரமாட்டார் வடிவேலு!. அவ்வளவு மோசமானவரா வைகைப்புயல்!..

Vijayakanth: பொதுவாக சிலர் தனக்கு உதவியர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால், சிலரோ வளர்ந்து ஒரு இடத்திற்கு போய்விட்டால் அந்த நன்றியை மறந்துவிட்டு நடந்துகொள்வார்கள். திரையுலகில் பலரும் அப்படித்தான். வாய்ப்பு இல்லாத காலங்களில் உதவி கேட்டு மற்றவர்களிடம் கெஞ்சுவார்கள். ஆனால், வாய்ப்புகள் கிடைத்து மேலே போன பின் நன்றி உணர்ச்சி இல்லாமல் நடந்துகொள்வார்கள்.

vadivelu

அதில் ஒருவர்தான் நடிகர் வடிவேலு. இதை திரையுலகில் பலருமே சொல்லி இருக்கிறார்கள். வடிவேலுவுக்கு முதல் வாய்ப்பு கொடுத்ததே நடிகர் ராஜ்கிரண்தான். ஆனால், அவர் கஷ்டத்தில் இருந்தபோது அவருக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு அதை எல்லோரிடமும் சொல்லி காட்டியவர்தான் வடிவேலு. இதற்காக விஜயகாந்தின் கோபத்திற்கும் அவர் ஆளானார்.

இதையும் படிங்க: புரமோஷனுக்கு மட்டும் டிவிட் போடும் விஜய்!.. விஜயகாந்துக்கு வாயவே தொறக்கலயே!..

அதேபோல், சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க கூடாது என கவுண்டமணி சொல்லிவிட, விஜயகாந்திடம் போய் வடிவேல் ஒப்பாரி வைக்க இயக்குனரை அழைத்து ‘எனக்கு பக்கத்தில் குடை பிடித்து நிற்கும் வேடத்தை இவருக்கு கொடு’ என சொன்னதோடு மட்டுமில்லாமல் தனது சொந்த செலவில் வடிவேலுவுக்கு 5 வேஷ்டி, சட்டையும் விஜயகாந்த் வாங்கி கொடுத்தார்.

chinna

பின்னாளில் விஜயகாந்தை வடிவேலு எவ்வளவு மோசமாக திட்டினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் அவரை திரையுலகமே ஒதுக்கி வைத்தது. வடிவேலுவுக்கு ஒரு பழக்கம் உண்டு. தன்னுடன் நடித்த எந்த நடிகர் கஷ்டப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு ஒத்த பைசா கூட கொடுக்கமாட்டார். அதேபோல், சக நடிகர்கள் இறந்தாலும் அஞ்சலி செலுத்த போக மாட்டார். விவேக், மயில்சாமி, மனோபாலா, அல்வா வாசு, போண்டா மணி ஆகியோரின் இறப்புக்கு கூட வடிவேல் போகவில்லை.

இதையும் படிங்க: தனுஷ் குடும்பத்திற்கு இவ்ளோ விஷயம் செய்துள்ளாரா விஜயகாந்த்? இதுவரை வெளிவராத தகவல்..

அதோடு, அவருக்கு தெரிந்த திரையுலகினர் யாரேனும் சென்னையில் இறந்துவிட்டால் உடனே டிக்கெட் போட்டு மதுரைக்கு ஓடிவிடுவாராம். அதேபோல், மதுரையில் இறந்தால் சென்னைக்கு வந்துவிடுவாராம். அல்வா வாசுவின் மதுரையில் வடிவேலுவின் வீட்டின் அருகில்தான் உள்ளது. அவர் அங்கே இறந்த செய்தி கேட்டவுடன் உடனே சென்னை வந்துவிட்டார் வடிவேலு.

எனவே, இவர்கள் இறப்புக்கே போகாத வடிவேலு விஜயகாந்த மரணத்திற்கும் அஞ்சலி செலுத்த கண்டிப்பாக வரமாட்டார் என்றுதால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கேப்டனை பாராட்டிய ஜாக்கிசான்.!.. காரணம் இதுதான்!.. உருகும் ஸ்டண்ட் இயக்குனர்…

google news
Continue Reading

More in Cinema History

To Top