Categories: Cinema News latest news

அதிரிபுதிரியாக வெளியான ‘ரோமியோ’ பட போஸ்டர்.. வேற வழியில்லாம தஞ்சம் அடைந்த விஜய் ஆண்டனி

Actor Vijay Antony: தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருந்தார் விஜய் ஆண்டனி. அதன் பின் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் நடித்து வெளியான ஆரம்பகால படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

நான், பிச்சைக்காரன், சைத்தான், சலீம், திமிரு புடிச்சவன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் விஜய் ஆண்டனியை ஒரு சிறந்த நடிகராக பார்க்க வைத்தது. அதிலும் குறிப்பாக சலீம், நான், பிச்சைக்காரன் வரிசையாக ஹிட் கொடுத்த படங்கள். ஒரு பெரிய மாஸையே கிரியேட் செய்தார் விஜய் ஆண்டனி.

இதையும் படிங்க: மீண்டும் சர்ச்சையில் சிக்க காத்திருக்கும் நயன்!… 90ஸ் பிரபல ஹிட் படத்தில் நடிக்க போறாராம்… வாய் சும்மா இருக்குமா?

ஆனால் சமீபகாலமாக வெளியாகும் விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறுவதில்லை. இருந்தாலும் விடாமுயற்சியுடன் போராடி கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவரின் நடிப்பில் ரோமியோ என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த போஸ்டரில் விஜய் ஆண்டனியும் ஹீரோயினும் கையில் சரக்கு பாட்டிலுடன் கட்டிலில் அமர்ந்தவாறு போஸ் கொடுத்தனர். ஹிட்லர் படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்ட்டுக் கொண்டிருக்க திடீரென இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானதும் ஒன்றும் புரியாமல் ரசிகர்கள் திகைத்து வந்தனர்.

இதையும் படிங்க: பிரபாஸுடன் மீண்டும் இணையும் பிரசாந்த் நீல்!. பட் இது சலார் 2 இல்லையாம்!..

விஜய் ஆண்டனி நடிப்பில் ஹிட்லர் படத்தோடு சேர்த்து மூன்று படங்கள் ரிலீஸுக்காக அடுத்தடுத்து காத்துக் கொண்டிருக்கிறதாம். ஆனால் அந்த மூன்று படங்களின் சாட்டிலைட் உரிமையையும் வாங்க யாரும் முன்வரவில்லையாம். அதனாலேயே அந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய தாமதப்படுத்தி வருகிறார்கள்.

இதில் கடுப்பான விஜய் ஆண்டனி ஏற்கனவே அவர் நடித்து முடித்து வைத்த ரோமியோ பட போஸ்டரை வெளியிட்டதும் அந்த தயாரிப்பாளர்கள் டென்ஷனாகி விட்டார்களாம். இதனால் சமயோகிதமாக யோசித்த விஜய் ஆண்டனி ரோமியோ படத்தை ரெட் ஜெயண்டிடம் கொடுத்து ரிலீஸ் செய்ய சொல்லிவிட்டாராம். இப்போ யாரும் ஒன்றும் பண்ணமுடியாது அல்லவா?

இதையும் படிங்க: ரஜினி கொடுத்த வாய்ப்பை யூஸ் பண்ணி இருந்தா 10 வீடு வாங்கி இருப்பேன்!. புலம்பும் செந்தில்…

Published by
Rohini