Cinema News
கில்லி படத்தில் முக்கிய விஷயத்தை மாற்றிய விஜய்!. அட இது டைரக்டருக்கே தோணலயே!…
நடிகை விஜயை வசூல் மன்னனாக காட்டிய திரைப்படம்தான் கில்லி. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்து ஓக்கடு என்கிற பெயரில் வெளியான படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான படம் இது. 2004ம் வருடம் வெளியான இந்த படத்தை இயக்குனர் தரணி இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.
ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விஜயின் தங்கையாக நான்சி ஜெனிஃபரும், அம்மாவாக ஜானகி கணேசனும், அப்பாவாக ஆசிஷ் வித்யார்த்தியும் நடித்திருந்தனர். கபடி விளையாடுவதற்காக மதுரை போகும் விஜய் அங்கு முத்துப்பாண்டி பிரகாஷ்ராஜிடமிருந்து தப்பித்து ஓடும் திரிஷாவை காப்பாற்றுகிறார்.
இதையும் படிங்க: கில்லி ஹிட்டை தொடர்ந்து அந்த படமும் ரி-ரிலீஸ் ஆகுதான்!.. விஜய் பேன்ஸ்க்கு செம திருவிழாதான்!…
அவரின் பிரச்சனையை புரிந்துகொண்டு பிரகாஷ்ராஜ் மற்றும் மதுரை போலீஸ் கண்ணில் மண்ணை துவி அவரை சென்னை அழைத்து தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் தங்க வைப்பார். தங்கைக்கு மட்டுமே தெரிய வர அவரும் திரிஷா – விஜய்க்கு உதவி செய்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
அதோடு, படத்தின் இறுதியில் கபடி விளையாட்டில் விளையாட போயிருக்கும் விஜயை அவரின் அப்பாவே கைது செய்ய செல்லும்போது அவரை தடுத்து விஜய்க்கு கபடி விளையாட்டு எவ்வளவு பிடிக்கும் என்பதை சொல்லி அவருக்கு புரியவைத்து விஜய் விளையாடி முடியும் வரைக்கும் அவரை காத்திருக்க வைக்கும் கதாபாத்திரம் அது.
இதையும் படிங்க: 15 நிமிஷம் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?!.. கமலோட மார்கெட் ஜெட் வேகத்துல ஏறுதே!….
முதலில், விஜய்க்கு ஒரு தம்பி என்பது போலத்தான் தரணி யோசித்து வைத்திருந்தாராம். அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக வரும் நடிகரை நடிக்க வைக்கலாம் எனவும் யோசித்திருக்கிறார். அனால், அந்த கதாபாத்திரத்தில் தம்பி என்பதை விட தங்கை இருந்தால் செண்டிமெண்ட் காட்சிகள் சிறப்பாக அமையும் என இயக்குனர் தரணியிடன் சொல்லி இருக்கிறார் விஜய்.
அதன்பின் விஜய் சொன்னபடியே அதை தங்கை கதாபாத்திரமாக மாற்றி ஜெனிஃபரை நடிக்க வைத்திருக்கிறார் தரணி. விஜய் சொன்னது போலவே அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் நன்றாகவே வொர்க் அவுட் ஆகி இருந்தது.