15 நிமிஷம் நடிக்க இத்தனை கோடி சம்பளமா?!.. கமலோட மார்கெட் ஜெட் வேகத்துல ஏறுதே!....

Kamalhassan: கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக இருப்பவர். அவர் படத்துக்கே அத்தனை எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கேமியோ ரோல் நடித்தால் ரசிகர்கள் செம லைக்ஸ் குவிப்பார்கள் தானே. அப்படி ஒரு படத்துக்கு அவர் வாங்கும் சம்பளம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கின்றனர். கல்கி 2898 ஏடி எனப் பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இப்படம் இந்த வருடத்தின் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் 600 கோடி எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நல்லவேளை கலர்ல போடல!.. தலைவி வேறலெவல்!.. பில்லா பட எபெஃக்ட் காட்டும் நயன்தாரா…

இப்படத்தில் 20 நாட்கள் கமல்ஹாசன் கால்ஷூட் கொடுத்து இருந்தாராம். முதலில் வில்லன் ரோலில் நடிக்கிறார் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது அது கேமியோ ரோல் தான் எனக் கிசுகிசுக்கப்படுகிறது. மொத்த படத்திலே வெறும் 15 நிமிசம் தான் கமல்ஹாசனின் கேரக்டர் வருகிறதாம். அதற்கு சம்பளமாக 20 கோடி ரூபாய் வரை கமல்ஹாசன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சனுக்கு சம்பளமாக 18 கோடி ரூபாய் வரை மட்டுமே சம்பளமாக வாங்கி இருக்கிறார்களாம். இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரபாஸுக்கு சம்பளமாக ரூபாய் 150 கோடி வரை சம்பளமாக கொடுத்து இருக்கின்றனராம். மேலும் இப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வரும் மே 9ந் தேதி ரிலீஸாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: சின்ன பையனுடன் ’அந்த’ தொடர்பில் இருந்த சில்க் ஸ்மிதா… கடைசியில் நடந்தது தான் அதிர்ச்சி…

 

Related Articles

Next Story