இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்!. இதத்தான் கமலும் சொன்னாரு.. என்ன செய்வார் விஜய்!?...

by சிவா |   ( Updated:2024-02-02 08:44:22  )
இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்!. இதத்தான் கமலும் சொன்னாரு.. என்ன செய்வார் விஜய்!?...
X

அப்பா சந்திரசேகர் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் விஜய். துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து அதன்பின் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறி இப்போது ஒரு மாஸ் ஹீரோவாகவும் மாறியிருக்கிறார். அவரின் சம்பளம் ரூ.250 கோடிக்கும் மேல் அதிகரித்திருக்கிறது. அவர் 300 கோடி கேட்டாலும் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

ஒருபக்கம் கடந்த சில வருடங்களாகவே விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தார். எனவே, எப்போது வேண்டுமானாலும் அவர் அரசியலுக்கு வருவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலை அவர் குறிவைப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு.. அவரை காப்பாத்தணும் கர்த்தரு!.. கடைசியா கட்சியை அறிவித்த விஜய்!..

அப்படி எதிர்பார்த்ததே இப்போது நடந்திருக்கிறது. தனது அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என அறிவித்திருக்கிறார். இது அவரின் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழகமெங்கும் உள்ள மன்ற நிர்வாகிகள் இனிப்பு கொடுத்தும், பட்டாசு வெடித்தும் விஜயின் அரசியல் வருகையை கொண்டாடி வருகின்றனர்.

2024 பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது எனவும், 2026ம் வருடம் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை நமது இலக்கு எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக 2024 பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் விஜய் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: இந்த முறையாவது சந்தானம் சிரிக்க வைத்தாரா?.. வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம் இதோ!..

அதேநேரம், அந்த அறிவிப்பில் தற்போது நடித்து வரும் படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியல் பணியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதுதான் அவரின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், விஜயின் அரசியல் எண்ட்ரியை அவரின் ரசிகர்கள் விரும்பினாலும் திரையில் அவரை நடிகராக பார்க்கவே அவரின் ரசிகர்கள் விரும்புவார்கள்.

அதேநேரம், அரசியல் கட்சி துவங்கும்போது கமலும் இப்படித்தான் சொன்னார். ஆனால், அவர் எதிர்பார்த்த ஓட்டு விழவில்லை என்றதும் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். இப்போது அவரின் கையில் 5 படங்கள் இருக்கிறது. விஜய்க்கு என்ன நடக்கும்?. அவருக்கு ஓட்டுக்கள் விழுமா? மீண்டும் சினிமாவில் நடிப்பாரா? என்பதையெல்லாம் மக்களே தீர்மானிப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: 33 வருஷம் கழிச்சு ரி எண்ட்ரி ஆகும் செண்பகம்! அப்ப விட்டத இப்ப பிடிப்பேன்! விஜய், அஜித் எல்லாம் ரெடியா இருங்க

Next Story