Jananayagan: ஹாலிவுட் ரேஞ்சுக்கு ரோபோவுடன் மோதும் விஜய்!.. வேறலெவல் ட்ரீட்!…

Published on: January 7, 2026
vijay
---Advertisement---

தெலுங்கில் பாலையா நடித்து சூப்பர் ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் கதையைத்தான் அப்படியே ஜனநாயகன் படமாக எடுத்திருக்கிறார்கள் என சிலர் சொல்வதில் உண்மை இல்லை. அந்த படத்தில் வரும் சில காட்சிகளை மட்டுமே இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மற்றபடி மொத்த திரைக்கதையையும் மாற்றியிருக்கிறார் ஹெச்.வினோத்.
அதாவது பகவந்த் கேசரியில் இல்லாத அந்த படத்திற்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத பல காட்சிகளை ஜனநாயகனுக்காக உருவாக்கியிருக்கிறார் ஹெச்.வினோத். குறிப்பாக இந்த படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம்.

Also Read

மேலும் விஜய் தொடர்பான ஆக்சன் காட்சிகள் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் ஆகியவை பகவந்த் கேசரியை விட இந்த படத்தில் சிறப்பாக அமைந்திருப்பதாக பலரும் சொல்கிறார்கள். பகவந்த் கேசரி படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் பெரிதாக இல்லை. ஆனால் ஜனநாயகன் படத்தில் அரசியல் தொடர்பான கட்சிகள் நிறைய இருக்கிறது.

அதோடு ‘நான் மட்டும் இதை செய்து விட்டால் இந்தியாவே என் காலுக்கு கீழ்’ என வில்லனான பாபு தியோல் ஒரு வசனமும் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது. அதாவது ரோபோக்களை உருவாக்கி இந்தியாவையே மிரட்டும் வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறாராம்.

இந்தியாவையே அழிக்க வில்லன் முயல்வது போலவும், அதை விஜய் தடுப்பது போலவும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் ஹெச் வினோத்.

அதிலும் ரோபோக்களோடு விஜய் மோதும் சண்டைக்காட்சி அதகளமாக வந்திருக்கிறதாம். கண்டிப்பாக ஆக்சன் விரும்பிகளுக்கு இது அது விருந்தாக அமையும் என்கிறார்கள். இந்நிலையில்தான் ரோபோக்களுடன் விஜய் மோதும் ஆக்‌ஷன் காட்சி தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.