Cinema News
திரிஷா விவகாரம்!.. அரசியலுக்கு வந்த பின்னரும் வாய் திறக்காமல் இருக்கும் விஜய்!.. பொங்கும் நெட்டிசன்ஸ்..
நடிகர் விஜய் எப்போதும் மிகவும் அமைதியானவர். படப்பிடிப்பில் கூட யாரிடம் அதிகம் பேசமாட்டார். படப்பிடிப்புக்கு தளத்திற்கு வந்ததும் நேராக கேரவானுக்கு போவார். ‘ஷாட் ரெடி’ என உதவி இயக்குனர் அழைத்ததும் கீழே இறங்கி வருவார். இயக்குனர் சொல்வதை கேட்டு நடித்துவிட்டு மீண்டும் கேரவானுக்கு போய்விடுவார். படப்பிடிப்பு முடிந்ததும் காரில் ஏறி வீட்டுக்கு போய்விடுவார்.
இதுதான் விஜயின் ஸ்டைல். இதைத்தான் பல வருடங்களாக அவர் செய்து வருகிறார். துவக்கத்தில் இது பலருக்கும் பிடிக்கவில்லை. ‘எதுவுமே பேசமாட்டேங்குறார்’ என சில நடிகைகளே பேட்டியில் ஜாலியாக சொன்னார்கள். ஒருகட்டத்தில் விஜயின் சுபாவமே இதுதான் என அவருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் புரிந்துகொண்டார்கள்.
இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு போறதனால எல்லாம் தியேட்டர் வசூல் பாதிக்காது!.. ஓப்பனா உண்மையை சொன்ன பிரபலம்!..
அதோடு ‘கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும்.. உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னு இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என ஒரு விழாவில் புதிய தத்துவம் பேசினார் விஜய். சினிமாவில் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது போல் நடிக்கும் விஜய் நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் அது பற்றி பேசவே மாட்டார். அது எவ்வளவு சீரியஸான விஷயமாக இருந்தாலும் சரி.. அமைதியாகவே இருப்பார். ‘தேவையில்லாமல் கருத்து தெரிவித்து அரசியல்வாதிகளின் கோபத்தை ஏன் சம்பாதிக்க வேண்டும்?’ என்பதுதான் அவரின் நிலைப்பாடு.
தனது படங்கள் தொடர்பான முக்கிய அப்டேட்டுகளை பகிர்வதற்கு மட்டுமே தனது டிவிட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகிறார். அதில் ஒரு நாளும் அவர் சமூக பிரச்சனைகள் பற்றி பேசியதே இல்லை. சமீபத்தில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இனிமேலாவது சமூகபிரச்சனைகள் பற்றி அவர் பேசுவார் என பலரும் நினைத்தனர்.
அது நடக்குமா என்பது தெரியவில்லை. இந்நிலையில்தான் விஜயுடன் பல படங்களில் நடித்தவரும், அவருக்கு மிகவும் நெருக்கமான தோழியுமான திரிஷா பற்றி அதிமுக பிரமுகர் ஏ.வி. ராஜூ பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கூவத்தூரில் நடிகைகள் வரவழைக்கப்பட்டார்கள். அதில் திரிஷாவும் ஒருவர் என அவர் கொளுத்திப்போட சமூகவலைத்தளங்களே பரபரப்பானது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என திரிஷா கூறினார்.
இதையும் படிங்க: திரிஷா பிரச்சனையில் தலையை விட்ட மன்சூர் அலி கான்!.. அவசர அவசரமா என்ன சொல்லியிருக்காரு பாருங்க!
இயக்குனர் சேரன், விஷால் உள்ளிட்ட பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ‘நான் திரிஷாவை சொல்லவில்லை. திரிஷா போல என்றுதான் சொன்னேன்’ என சூப்பர் விளக்கம் கொடுத்தார் அந்த அரசியல் பிரமுகர். அதன்பின் நான் அந்த நடிகையை சொல்லவே இல்லை. புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்திருக்கிறார்.
இப்போதுவரை விஜய் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நடிகராக இருந்தபோது அவர் எதைப்பற்றியும் பேசவில்லை சரி. இப்போது அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின்னரும் அவர் வழக்கம்போல் அமைதியாகவே இருக்கிறார். குறைந்தபட்சம் இதைக்கண்டித்து ஒரு அறிக்கையாவது அவர் வெளியிட்டிருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.
இதையும் படிங்க: இவங்க எந்த லெவலுக்கும் போவாங்க!.. விடமாட்டேன்!.. டிவிட்டரில் பொங்கிய திரிஷா….