Connect with us

Cinema News

விஜய் அரசியலுக்கு போறதனால எல்லாம் தியேட்டர் வசூல் பாதிக்காது!.. ஓப்பனா உண்மையை சொன்ன பிரபலம்!..

நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதால் தியேட்டர் தொழில் ஒன்றும் பெரிதாக பாதிக்காது என திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.

ஓடிடியில் புதிய படங்கள் நான்கு வாரத்திற்குள் ரிலீஸ் ஆவதால் தியேட்டர் பிசினஸ் பெரிதும் பாதித்து வருவதாகவும் கடந்த நான்கு மாதங்களாக தியேட்டருக்கு மக்கள் வருகை மிகவும் குறைந்து விட்டதாகவும் தயாரிப்பாளர்கள் ஓடிடி நிறுவனங்களுக்கு ஹிந்தி படங்களைப்போல நான்கு வாரங்களுக்கு பதில் எட்டு வாரங்கள் கழித்து படத்தைக் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக திருப்பூர் சுப்பிரமணியம் முன் வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: 12 வருட உறவு!.. ஒருவழியா கர்ப்பமான தீபிகா படுகோன்?.. அப்போ பிரபாஸ் படத்தோட நிலைமை?..

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் மற்றும் தளபதி 69 படத்துடன் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு அரசியலுக்குள் நடிகர் விஜய் நுழையப் போவதாக அறிவித்திருக்கிறார். பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசானால் மட்டுமே ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று படத்தைப் பார்க்கும் நிலைமை உருவாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதால் தேர்தல் பெரிதும் பாதிக்கப்படும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதெல்லாம் ஒன்றும் கிடையாது முன்பு எம்ஜிஆர், சிவாஜி ரஜினி – கமல், அஜித் விஜய் என முன்னணி ஹீரோக்கள் சினிமாவை வாழவைத்த வந்தனர். விஜய் அஜித்துக்கு பிறகும் பல நடிகர்கள் வந்துவிட்டனர். அதனால் விஜய் அவர் விருப்பப்படி அரசியலுக்கு செல்வது குறித்து எந்த ஒரு கமெண்ட்டும் அடிக்க முடியாது. அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். ஆனால், அதனால் எல்லாம் சினிமா தொழில் பாதிக்காது என பளிச்சென பேசியிருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.

இதையும் படிங்க: வேட்டையன் ஹீரோயின் உக்காந்துருக்க ஷேப்பே சரியில்லையே!.. பார்த்தாலே சும்மா ஜிவ்வுங்கதே!..

google news
Continue Reading

More in Cinema News

To Top