குழப்பத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் விஜய்! தளபதி 69 அவ்ளோதானா?

goat
Actor Vijay: தமிழ் சினிமாவில் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தற்போது அரசியலிலும் ஒரு பிடி பார்த்துவிட வேண்டும் என களம் இறங்கியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதியதாக கட்சியை ஆரம்பித்திருக்கும் விஜய் அவ்வப்போது தனது இயக்க நண்பர்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் விஜய் நடிக்க இருக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடிக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து லைலா, பிரசாந்த், பிரபுதேவா போன்ற முக்கிய நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் விஜய் முழுவதுமாக அரசியலில் ஈடுபடுவதால் சினிமாவிற்கு முழுக்கு போடப் போவதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: புறநானூறுக்கு வச்சாச்சு ஃபுல் ஸ்டாப்! கோலிவுட்டுக்கு டாட்டா.. வெளியான சூர்யாவின் உண்மையான முகம்
2026 ஆம் ஆண்டு வரும் சட்ட மன்ற தேர்தலை எதிர்பார்த்திருக்கும் விஜய் அதுவரை அவர் ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு ஒரேடியாக சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். அதில் இந்த கோட் படம் மற்றும் தளபதி 69 படம் அடங்கும். கோட் படத்திற்கு பிறகு அடுத்தப் படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது.
பல இயக்குனர்களின் பெயர்கள் விஜயின் டேபிளில் தான் இருக்கிறதாம். விஜய்தான் முடிவு செய்ய வேண்டுமாம். இதில் விஜய் அந்த இயக்குனர்களிடம் அதற்குள் ஒரு படத்தை எடுத்துவிட்டு வாங்களேன் என்ற அறிவுரையையும் கொடுத்து வருகிறாராம். தன்னுடைய படத்திற்கு இயக்குனரை தேர்வு செய்வார் என்று பார்த்தால் அவர்களிடம் இன்னொரு படத்தை முடித்து விட்டு வர சொல்கிறாராம் விஜய்.
இதையும் படிங்க: சம்பளத்தை வாங்க கண்ணதாசனும், எம்.எஸ்.வியும் போட்ட நாடகம்!.. அட இது நல்லா இருக்கே!…
இதில் இருந்து விஜய் ஏதோ ஒரு குழப்பத்தில் இருப்பதாகவும் ஒரு வேளை கதை பிடிக்காமல் அவர்களிடம் எப்படி நேரிடையாக சொல்வது என்று தெரியாமல் இப்படி பேசுகிறாரா என்றும் கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள். மேலும் நேரிடையாக அந்த இயக்குனர்களை பார்த்து கதை பிடிக்கவில்லை என்று சொன்னால் எங்கே ஒரு ஓட்டு போய்விடுமோ என்று பயந்தே விஜய் இப்படி நாகரீகமாக சொல்கிறார் என்றும் கூறிவருகிறார்கள்.