விஜயகாந்தை கௌரவப்படுத்திய விஜய்! ‘லியோ’ சக்சஸ் மீட்டில் எத்தனை பேர் இத நோட் பண்ணீங்க?

Published on: November 2, 2023
kanth
---Advertisement---

Vijay talk about Captain: மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது லியோ பட வெற்றிவிழா. அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்த அந்த குட்டி ஸ்டோரியும் விழாவை மேலும் சிறப்பாக்கியது. என்னடா இது? குட்டி ஸ்டோரியை மிஸ் பண்ண்ட்டோமே என்ற வருத்ததில் இருந்த ரசிகர்களை விஜய் இந்த வெற்றி விழாவின் போது குதூகலப்படுத்தி விட்டார்.

நிறைய விஷயங்களை இந்த சக்சஸ் மீட்டில் விஜய் பேசியிருந்தார். மறைமுகமாக தனது அரசியல் வருகை இப்படித்தான் இருக்கும் என்று சொல்லியிருந்தார். அப்பா சட்டையை மகன் போட ஆசைப்படக் கூடாதா? அப்பா சேரில் உட்கார கூடாதா? என்ற கேள்விக்கு பின்னாடி ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன.

இதையும் படிங்க: ஈஸ்வரியம்மா உங்க மகனுக்கு காசு கொடுக்குறது இருக்கட்டும்… என்ன செலவு பண்ணாருனு கேட்டீங்களாக்கும்..!

திரையுலகை சார்ந்தவர்கள் ரஜினியை குறிப்பிட்டுத்தான் சொல்கிறார் விஜய் என்று நினைப்பார்கள். ஒரு சாரார் அந்த இடத்திற்கே விஜய் ஆசைப்படுகிறாரோ என்று நினைப்பார்கள். மேலும் ரசிகர்களிடமும் ‘ நான் சோசியல் மீடியாக்களை கவனித்து வருகிறேன். ஏன் இவ்ளோ கோவம் உங்களுக்கு. நமக்கு அது வேலை இல்லை. நமக்கான வேலை நிறைய இருக்கு’ என்று கூறி அரசியலில் எப்படி இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

மேலும் மக்கள் திலகம்னா ஒருத்தர்தான், நடிகர் திலகம்னா ஒருத்தர்தான், கேப்டன்னா ஒருத்தர்தான், உலக நாயகன்னா ஒருத்தர்தான், சூப்பர்ஸ்டார்ன்னா ஒருத்தர் தான், தலன்னா ஒருத்தர் தான் என அனைத்து நடிகர்களையும் அவர்களது ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும் வகையில் பேசிய இந்த பேச்சை கவனித்த நெட்டிசன்கள்,

இதையும் படிங்க: ‘ல்தகா சைஆ’ இருக்கா? இல்லையா? பிக்பாஸ் வீட்டுல புதுசா மலர்ந்த காதல் – செம ரொமான்ஸா இருக்கே

நடிகர்களுக்கான பட்டங்கள் தொடர்பாக எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என வரிசையாக அடுக்கியதும் அந்த பட்டியலில் அஜித்தை சேர்த்து பாராட்டியதும் கூட விசயமில்லை. அந்த வரிசையில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்தை தவறாமல் குறிப்பிட்டதுதான் விஜயின் நேர்த்தி என்று குறிப்பிட்டு விஜயை கொண்டாடி வருகிறார்கள் விஜயகாந்த் ரசிகர்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.