‘ல்தகா சைஆ’ இருக்கா? இல்லையா? பிக்பாஸ் வீட்டுல புதுசா மலர்ந்த காதல் - செம ரொமான்ஸா இருக்கே
BiggBoss Season: பிக்பாஸ் நிகழ்ச்சியின் தற்போது சீசன் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. நடந்து முடிந்த ஆறு சீசன்களை விட இந்த சீசனில் அதிகமான இளைஞர்களை பார்க்க முடுகிறது. ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாகவும் அதே சமயம் டாஸ்க் என்று வரும் போது சரியான முறையில் விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒருத்தருக்கொருத்தர் டஃப் கொடுத்தே ஆடி வருகின்றனர். என்னதான் நட்பாக பழகினாலும் டாஸ்க்கில் தன் தனித்தன்மையோடுதான் விளையாடிக் கொண்டு வருகிறார்கள். இது கூடவே ஆங்காங்கே காதல் லீலைகளும் அரங்கேறி வருகின்றனர்.
இதையும் படிங்க: அதுக்கு முதல்ல நீ ஜெயிக்கணும் பிகிலு!. விஜயை பங்கமாக கலாய்த்த புளூசட்ட மாறன்…
ஒரு பொண்ணும் பையனும் தனியாக உட்கார்ந்து பேசினால் அது காதலாகிவிடுமா என்று ரசிகர்களுக்கு மெசேஜை கொடுத்து தன் காதல் அரங்கேற்றத்தை நடத்தி வருகிறார்கள். ரவீனாவும் மணியும் தங்களுக்குள் காதல் இல்லை என்று சொல்லி வந்தாலும் கன்னத்தை கிள்ளுவதும் தூக்குவதும் நீ அவனிடம் பேசாதே. என் கூடவே நேரத்தை செலவழிக்கனும் என இந்த மாதிரி உரையாடல்களை கேட்கும் போது யாருக்குதான் சந்தேகம் வராது.
அதே போல் ஐஸூ மற்றும் நிக்ஷன் ஜோடியும் நண்பர்களாக மாறி அது ஒரு கட்டத்தில் காதல் வயப்படும் மிகவும் நேர்த்தியாக ஐஸு இனிமேல் என்னிடம் பேசாதே நிக்ஷா என்று சொல்லுவது கொஞ்சம் மடத்தனமாக இருக்கிறது. சும்மா இருந்தவனையும் உசுப்பேத்தி விட்டு நமக்குள் ஒன்றுமில்லை என்று சொல்லுவது நியாயமா என்று தோன்றுகிறது.
இதையும் படிங்க: புடவை நல்லாத்தான் இருக்கு!.. ஜாக்கெட்டு எங்க செல்லம்?!.. இளசுகளை இம்சை செய்யும் தர்ஷா…
இந்த நிலையில் ஏற்கனவே பூர்ணிமாவுக்கு அவ்வப்போது நூல் விட்டு பார்த்த விஷ்ணு நேற்று பூர்ணிமாவுடன் தனியாக உட்கார்ந்து பேசும் போது ‘interest இருக்கா இல்லையா? ’ என கேட்கிறார். அதற்கு பூர்ணிமா தரையையே பார்த்துக் கொண்டிருக்கிறார். உடனே விஷ்ணு என்ன எதாவது சொல்லு என கேட்கிறார்.
ஆனால் பூர்ணிமா ஹாலில் இருந்த அக்ஷயாவுடன் பேச்சுக் கொடுக்க அதற்கு விஷ்ணுவும் என்ன கவனத்தை திசை திருப்புறீயா? இல்ல மறைக்கிறீயா? என்று கேட்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றது. என்னதான் விஷ்ணு அதிகமாக கோபப்பட்டாலும் பூர்ணிமாவுடனான அந்த கெமிஸ்டிரி பார்க்கும் போது நம்மை ஈர்க்கிறது.
இதையும் படிங்க: ரஜினிக்கு கலாநிதி மாறன்னா விஜய்க்கு இவர்தான்! இவர விட்டுராதீங்க தளபதி – 2026க்கு தேவைப்படும் முக்கியமான பீஸு
COPYRIGHT 2024
Powered By Blinkcms