ஈஸ்வரியம்மா உங்க மகனுக்கு காசு கொடுக்குறது இருக்கட்டும்… என்ன செலவு பண்ணாருனு கேட்டீங்களாக்கும்..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமியை நேரில் சந்தித்து எழிலின் வாழ்க்கையில் நடந்த விஷயத்தினை சொல்லுகிறார். அமிர்தாவின் முதல் கணவரான கணேஷ் வந்த விஷயத்தினை சொல்ல பழனிச்சாமிக்கும் அதிர்ச்சி ஆகி விடுகிறது.
இந்த விஷயத்தை நீங்க சம்மந்தப்பட்ட எழில் கிட்ட சொல்லிடுங்க. அதான் நல்லது. வேறு யார் மூலமாவோ எழிலுக்கு தெரிறதுக்கு உங்களாளே தெரிஞ்சிட்டால் தீர்வே கிடைத்து விடும் என்கிறார். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை கோபி பார்த்து விடுகிறார்.
இதையும் படிங்க: அப்பா சட்டைக்கும்!.. அப்பா சேருக்கும் பையன் ஆசைப்படுறது தப்பில்லையே!.. விஜய் சொன்ன அந்த அப்பா யாரு?..
ஆனால் அங்கு எதுவும் பேசாமல் வீட்டிற்கு கிளம்பி விடுகிறார். இதையடுத்து வீட்டில் காய்ச்சலில் படுத்து இருக்கிறார் இனியா. ரூமுக்குள் வரும் ராதிகா சாப்பிட்டியா எனக் கேட்க அம்மா வரணும் என்கிறார். ராதிகா தான் எடுத்து வந்த சாப்பாடை ஊட்டி விடுகிறார்.
வீட்டுக்கு வரும் பாக்கியா ஊர் சுற்றி வர இனியாவுக்கு உடம்பு சரியில்லாததை பார்க்க முடியலையா உன்னால என்கிறார். இதையடுத்து ஈஸ்வரியும் கேட்க வேலை இருந்ததாக சொல்லி சமாளிக்கிறார். ஈஸ்வரி அங்கிருந்து நகர நீ வேலையா செஞ்ச, பழனிச்சாமிக்கிட்ட தானே பேசிக்கிட்டு இருந்த எனக் கடுப்பாக சொல்கிறார்.
அதையடுத்து கோபியை தேடி பேங்க் ஆட்கள் வந்து சீக்கிரம் கட்டுங்க சார். இல்லை பிரச்னை பெருசாகிடும் என்கின்றனர். இதைக்கேட்டு ஈஸ்வரி அங்கு வர அவரிடம் சமாளிக்க பார்க்கிறார். ஆனால் அவருக்கு கிரெடிட் கார்ட் அதிகாரிகள் என சரியாக கணித்து விடுகின்றனர்.
இதையும் படிங்க: இது அப்பவே சொல்லியிருக்கலாமே விஜய்!. சைலண்ட்டா இருந்து.. யூடர்ன் பண்ணி.. டேபிளை உடைச்சி!..
இதையடுத்து தன்னுடைய நகையை வைத்து பணத்தினை கட்ட சொல்கிறார். ஆனால் கோபி அதற்கு மறுப்பு தெரிவித்து நகர்ந்து விடுகிறார். பின்னர் பாக்கியா எழிலிடம் இந்த விஷயத்தினை கூறிவிடலாம் என முடிவெடுக்கிறார். இதையடுத்து எழில் நிலாவிடம் விளையாடி கொண்டு வருகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms