More
Categories: Cinema News latest news

இவரா பார்ட்டி வச்சு கொண்டாடினது? ‘பாபா’ தோல்வி எந்தளவுக்கு விஜயை பாதிச்சிருக்கு பாருங்க

Baba Vijay: கோலிவுட்டில் ரஜினிக்கு பிறகு அவருடைய அந்தஸ்துக்கு இணையாகவும் ரசிகர்களின் செல்வாக்குக்கு இணையாகவும் இருந்து வருபவர் நடிகர் விஜய். ரஜினியை எந்த அளவு கொண்டாடி வருகிறார்களோ அதே அளவு விஜயையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிட்டத்தட்ட அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்ற அளவுக்கு விஜய் மீது ரசிகர்கள் அதிகளவு அன்பை கொட்டி வருகின்றார்கள்.

ரசிகர்கள் மட்டுமல்ல திரை பிரபலங்களும் இதே மாதிரிதான் பேசி வருகிறார்கள். ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் என்றுதான் சொல்லி வருகிறார்கள். ஆனால் இருவருக்கும் உள்ளுக்குள்ளேயே ஒரு பூசல் இருந்து கொண்டு வருவதாக சில தகவல்கள் வெளியாகின. குறிப்பிட்ட சொல்ல வேண்டுமென்றால் ரஜினி நடித்த பாபா பட தோல்வியை விஜய் பார்ட்டி வைத்து கொண்டாடினார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின .

இதையும் படிங்க: நான் சொல்ற மாதிரி நடின்னு அஜீத்துக்குக் கட்டளையிட்ட இயக்குனர்… இப்படி எல்லாமா நடந்தது?

ஆனால் உண்மையிலேயே பாபா படத்தோல்வி விஜய்க்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருக்கும் ஒரு சம்பவத்தை பற்றித்தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். ஜாக்குவார் தங்கம் ஒரு பேட்டியில் கூறும்போது  ‘பகவதி படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம் விஜய். அந்த சமயத்தில்தான் பாபா படத்தை பார்த்துவிட்டு வந்திருக்கிறார். படத்தை பார்த்து மிகவும் அப்சட்டில் இருந்தாராம் விஜய்.

பகவதி படத்திற்காக ஒரு காட்சியில் கத்தியை மேலே தூக்கிப்போட்டு அதை பிடிக்க வேண்டும் விஜய். ஆனால் பாபா படத்தின் தோல்வியால் அப்செட்டில் இருந்த விஜய் அந்தக் கத்தியை பிடிக்க முடியாமல் போனதாம். அதைப் பற்றியே பேசிக்கொண்டே இருந்தாராம் .அதன் பிறகு படக்குழுவினர் அனைவரும் விஜயிடம் பேசி அவரை சமரசம் செய்து அந்த காட்சியில் நடிக்க வைத்தார்களாம்’. இந்த அளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகராக இருந்திருக்கிறார் விஜய் என ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கூறினார்.

இதையும் படிங்க: என்ன சார் நீங்க!. இப்படி காட்டினாத்தான் படம் பார்க்க வருவாங்க!.. முருகதாஸை அதிரவைத்த நயன்தாரா!..

 

Published by
Rohini

Recent Posts