Cinema News
அந்த வடிவேலு படத்தில் நடிக்க வேண்டியது விஜயா?!.. படம் வேறலெவலா இருந்திருக்குமே!…
தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்த திரைப்படத்தில் எந்த நடிகர் நடிக்கிறார் என்பதை யாராலும் முடிவு செய்யவே முடியாது. அதை காலமும், சூழ்நிலையுமே தீர்மானிக்கும். ரஜினிக்கு சொல்லப்பட்ட கதையில் கமல் நடிப்பார். கமல் நடிக்க வேண்டிய படத்தில் ரஜினி நடிப்பார். அஜித்துக்கு சொல்லப்பட்ட கதையில் சூர்யா நடித்து ஹிட் கொடுப்பார்.
விஜய் நடிக்க வேண்டிய படத்தில் சூர்யா நடிப்பார். இப்படி நடிகர்களின் கால்ஷீட்டுக்கு ஏற்றபடி எல்லாமே மாறும். எந்த கதைக்கு யார் நடிகர் என்பதை சில காரணங்களே தீர்மானிக்கும். ஷங்கர் தான் எழுதிய எல்லா கதைகளுக்கும் முதலில் சென்றது ரஜினியிடம்தான். ஜென்டில்மேன் கதை கமலுக்கு சொல்லப்பட்டது. இந்தியன் கதையை கூட ரஜினியை மனதில் வைத்துதான் ஷங்கர் எழுதினார்.
இதையும் படிங்க: மங்காத்தா ஹிட்டை ட்ரீட் வைத்து கொண்டாடிய விஜய்!.. என்னப்பா சொல்றீங்க!..
கமலுக்கு அவர் சொல்லி ரோபோ கதைதான் பின்னாளில் ரஜினி நடிக்க எந்திரனாக வெளிவந்தது. இப்படி பல உதாரணங்கள் சினிமா உலகில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் மசாலா திரைப்படங்களை இயக்கி வருபவர் சுராஜ். இயக்குனர் சுந்தர் சி-யிடம் சினிமா கற்றவர் இவர்.
எனவே, இவரின் படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. தலைநகரம், மருதமலை, மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார். கடைசியாக வடிவேலு வைத்து நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய தலைநகரம் மற்றும் மருதமலை ஆகிய இரண்டு படங்களிலும் வடிவேலுவின் காமெடி ஹைலைட்டாக இருக்கும்.
இதையும் படிங்க: தாய் இறந்த நிலையிலும் படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி!.. சோகத்திலும் நடிக்கவந்த நடிகர் திலகம்!..
தலைநகரத்தில் டுபாக்கூர் ரவுடி நாய் சேகராக வந்து வந்து கலக்கி இருப்பார். மருதமலை படத்தில் என்கவுண்டர் ஏகாம்பரமாக வந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். இந்த படத்தில் அர்ஜூனுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகள் வடிவேல் ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரைட்.
உண்மையில் மருதமலை படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் நடிகர் விஜய்தானாம். கதையெல்லாம் பிடித்து போய் சுராஜுக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் சச்சின் படத்தில் நடிக்க போய்விட, அர்ஜூனை வைத்து படத்தை எடுத்திருக்கிறார் சுராஜ். இதை சுராஜே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அர்ஜூன் நன்றாக நடித்திருந்தாலும் விஜய் நடித்திருந்தால் இப்படம் இன்னும் மாஸாக இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.