400 கோடி பெருசா? 4000 கோடி பெருசா? பெரிய இலக்கை நோக்கி படையெடுக்கும் விஜய்

Published on: January 3, 2024
vijay
---Advertisement---

Actor Vijay: இன்று கோலிவுட்டில் இருக்கும் செல்வாக்கு மிக்க நடிகராக இருப்பவர் நடிகர் விஜய்.தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவருடைய 68வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

சமீபத்தில் விஜய் விஜயகாந்தின் மறைவிற்கு வந்து சென்றார். அதுமட்டுமில்லாமல் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அடுத்த நாளே தூத்துக்குடி , நெல்லை மாவட்டங்களுக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார் விஜய்.

இதையும் படிங்க: 2023ல் விட்டத்தை 2024ல் பிடிக்க தயாராகும் கோலிவுட் சினிமா!.. அட என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்!

இப்பொழுதிலிருந்தே அரசியலுக்கான ஒரு வலிமையான அடித்தளத்தை போட்டு வருகிறார் விஜய். தளபதி 68  படத்திற்கு பிறகு இரண்டாண்டுகள் சினிமாவிற்கு விஜய் கேப் விடுவதாக செய்திகள் வெளியாகியது. வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலை விஜய் நேரிடையாக களத்தில் இறங்கி சந்திக்க இருப்பதால்,

இப்பொழுதில் இருந்தே அதற்கான வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இதைப் பற்றி ஒரு கேள்வியை வலைப்பேச்சு அந்தனனிடம் தொகுப்பாளர் கேட்டார். அதாவது இரண்டு வருடம் விஜய் நடிக்கவில்லை என்றால் 400 கோடி இழப்பிற்கு ஆவாரே என்று கேட்டார்.

இதையும் படிங்க: அட்லீ விஷயத்தில் கோடம்பாக்கம் செய்யும் தவறு! அவங்க பண்றத நாம் ஏன் பண்ணக் கூடாது? ஐய்யா SK என்ன சொல்றீங்க?

அதாவது விஜய் படம் வெலியாகி 400 கோடி வரை வசூல் செய்யும் என்பது உறுதி. அதை மனதில் வைத்துதான் தொகுப்பாளர் இந்த கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த வலைப்பேச்சு அந்தனன் ‘இந்தப் பக்கம் 400 கோடி நஷ்டம்னா அந்தப் பக்கம் அரசியலில் 4000 கோடி சம்பாதிக்கலாமே’ என்று அரசியல் நிலை குறித்து குறிப்பிட்டிருந்தார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.