கேப்டன் விஜயகாந்த் உடல் நாளை அடக்கம்!.. எந்த இடத்தில் தெரியுமா?...

by சிவா |
Vijayakanth
X

Vijayakanth

Actor vijayakanth: நடிகர், அரசியல்வாதி என்பதை எல்லாம் தாண்டி சிறந்த மனிதர் என்றே எல்லோராலும் நினைவு கூறப்படுபவர்தான் விஜயகாந்த். 80களில் சினிமாவில் நுழைந்து மெல்ல மெல்ல உயர்ந்து 90களில் பெரிய ஹீரோவாக மாறினார். எல்லோருக்கும் பிடித்த ஒரு நடிகராக விஜயகாந்த் இருந்ததுதான் அவரின் குணத்திற்கு கிடைத்த பரிசாகும்.

அதேபோல், மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் விஜயகாந்தை பிடிக்கும். சினிமாவில் அவமானங்களை தாண்டி வளர்ந்த விஜயகாந்துக்கு தமிழகத்தில் மூலையில் உள்ள குக்குராமங்களிலும் ரசிகர் மன்றங்கள் உருவானது. அந்த நம்பிக்கையில்தான் அரசியல் கட்சி துவங்கி சட்டசபையில் எதிர்கட்சி தலைவராகவும் அமர்ந்தார்.

இதையும் படிங்க: அவமானங்களை தாண்டி வளர்ந்த விஜயகாந்த்!.. கேலி செய்தவர்கள் முன் ஜெயித்து காட்டிய கேப்டன்…

இன்று காலை அவர் மரணமடைந்த செய்தி எல்லோருக்கும் இடியாக இறங்கியது. அதன்பின் அவரின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் அவரின் உடல் கோயம்பாட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு தேமுதிக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரின் உடல் வைக்கப்படவுள்ளது. ஒருபக்கம், அவரின் உடல் எங்கு அடக்கம் செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்தது. விஜயகாந்தின் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்வார்களா? இல்லை சென்னையிலேயே அவரின் அடக்கம் செய்யப்படுமா? என பலருக்கும் கேள்விக்கும் எழுந்தது.

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்தின் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. அரசு மரியாதையும் அறிவிப்பு!..

ஒருபக்கம், விஜயகாந்தின் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என அவரின் மனைவி பிரேமலதா முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையும் வைத்தார். ஆனால், அதற்கு அரசு தரப்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. அதேநேரம், விஜயகாந்துக்கு அரசு மரியாதை கொடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

vijayakanth

இந்நிலையில், நாளை மாலை 4.30 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீளாதுயரில் விட்டுச் சென்ற கேப்டன்! மரணச் செய்தி கேட்டு அலறும் மக்கள் – உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த ரசிகர்கள்

Next Story